Published:Updated:

சென்னை: பெண் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை; சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி ஆணையர்! - என்ன நடந்தது?

பாலியல் தொல்லை ( மாதிரி படம் )

சென்னையில் ஜி.எஸ்.டி ஆணையர் ஒருவர், பெண் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை: பெண் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை; சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி ஆணையர்! - என்ன நடந்தது?

சென்னையில் ஜி.எஸ்.டி ஆணையர் ஒருவர், பெண் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
பாலியல் தொல்லை ( மாதிரி படம் )

கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் சென்னை பெண் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவர், சென்னை ஜி.எஸ்.டி ஆணையராகப் பணியாற்றும் ரவிச்செல்வன் என்பவர் தனக்குப் பாலியல் தொல்லை தருவதாகப் புகார் தெரிவித்திருந்தார். மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க அதிகாரிகளிடம் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாகா குழு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில், அதிகாரிமீதான பாலியல் தொல்லை புகார் உண்மை என்பது கண்டறியப்பட்டது.

 பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்திரிப்புப் படம்

அதையடுத்து இந்தப் புகார் குறித்த விசாரணை அறிக்கை, மத்திய நிதித்துறைக்கும், மறைமுக வரிகள் வாரியத்தின் தலைவருக்கும் அனுப்பப்பட்டது. அதேசமயத்தில், இந்தப் புகாருக்கு மறுப்பு தெரிவித்து ரவிச்செல்வனும், மறைமுக வரிகள் வாரிய தலைவருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்தச் சூழலில், கமிஷனர் ரவிச்செல்வனைப் பணியிடை நீக்கம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய நிதித்துறைத் துணைச் செயலாளர் மனீஷ்குமார் சகாய் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 சஸ்பெண்ட்
சஸ்பெண்ட்

மேலும், ``ரவிச்செல்வன் சஸ்பெண்ட் காலத்தில் மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் செயல்படும் ஜி.எஸ்.டி தலைமை அலுவலகத்தில் இருக்க வேண்டும். உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் அலுவலகத்தைவிட்டு வெளியேறக் கூடாது" என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு, சென்னை மண்டல முதன்மை கமிஷன் தலைவர் வழியாக ரவிச்செல்வனுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.