Published:Updated:

குஜராத் கலவர வழக்கு; தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் - பொய் தகவல்களைக் கொடுத்ததாக சமூக ஆர்வலர் கைது!

டீஸ்டா செடல்வத் கைது

இந்த வழக்கை தொடுப்பதற்கு பின்னணியிலிருந்து செயல்பட்ட முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீ குமார், மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வத்(Teesta Setalvad) ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் கலவர வழக்கு; தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் - பொய் தகவல்களைக் கொடுத்ததாக சமூக ஆர்வலர் கைது!

இந்த வழக்கை தொடுப்பதற்கு பின்னணியிலிருந்து செயல்பட்ட முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீ குமார், மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வத்(Teesta Setalvad) ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Updated:
டீஸ்டா செடல்வத் கைது

பிரதமர் மோடிக்கு எதிராக 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கை தொடுப்பதற்கு பின்னணியிலிருந்து செயல்பட்ட முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீ குமார், மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வத்(Teesta Setalvad) ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக பதியப்பட்ட ஒன்பது பக்க முதல் தகவல் அறிக்கையில்‌, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஏற்கெனவே வேறொரு வழக்கில் தொடர்புடைய அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு சிறையிலிருக்கிறார்.

 டீஸ்டா செடல்வத்
டீஸ்டா செடல்வத்

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கிலிருந்து பிரதமர் மோடி உள்ளிட்ட சிலர் விடுவிக்கப்பட்டிருந்தனர். இப்படி விடுவிக்கப்பட்டது செல்லாது எனக் கலவரத்தில் இறந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எஹ்ஸான் ஜஃப்ரியின் மனைவி ஸகியா ஜஃப்ரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடி உள்ளிட்டோரை வழக்கிலிருந்து விடுவித்தது சரியானதே எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. ஸகியா ஜஃப்ரி இந்த வழக்கை தொடர்வதற்கு காரணமாகச் செயல்பட்டது டீஸ்டா செடல்வத்தான் எனக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்ரீ குமார், செடல்வத், சஞ்சீவ் பட் ஆகியோர்மீது ஃபோர்ஜெரியில் ஈடுபடுவது, தவறாகத் திரிக்கப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்துவது, திரிக்கப்பட்ட ஆதாரங்களை சமர்ப்பிப்பது, மற்றவரை காயப்படுத்தும் நோக்கில் தவறானத் தகவலைத் தருவது, அரசு அதிகாரிகள் தவறான ஆதாரங்களை உருவாக்குவது, கிரிமினல் குற்றம் ஆகியவற்றை உள்ளடக்கி பல்வேறு பிரிவுகளின் (Section 468,471,194,211,218,120 B) கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

 டீஸ்டா செடல்வத்
டீஸ்டா செடல்வத்

வழக்கு பதியபட்ட பின்பு குஜராத் காவல்துறையினர் ஸ்ரீ குமாரை அகமதாபாத்தில் கைதுசெய்தனர். செடல்வத்தை கைதுசெய்ய மும்பை சென்ற தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீஸார், அவரை அவருடைய இல்லத்தில் வைத்து தடுத்து குஜராத் அழைத்து வந்து கைதுசெய்யப்படுவதாகக் கூறினர்.

இந்த கைது நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியில் டீஸ்டா செடல்வத் குறித்து பேசி இருந்தார். ``உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நான் வாசித்தேன். அதில் டீஸ்டா செடல்வத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவரால் நடத்தப்பட்டு வரும் NGO, அதன் பெயர் சரியாகத் தெரியவில்லை. அந்த NGO குஜராத் கலவரம் குறித்து ஆதாரமற்ற தவறானத் தகவல்களைக் கூறி வருகிறது" எனக் கூறியிருந்தார்.