Published:Updated:

ரூ.2.69 கோடியை இழந்த தொழிலதிபர்: பாலியல் வலையில் சிக்கியது எப்படி... போலீஸார் விசாரணை!

மோசடி
News
மோசடி

குஜராத் தொழிலதிபர் ஒருவரைப் பாலியல் வலையில் சிக்கவைத்து ரூ.2.69 கோடி பணம் பறித்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரூ.2.69 கோடியை இழந்த தொழிலதிபர்: பாலியல் வலையில் சிக்கியது எப்படி... போலீஸார் விசாரணை!

குஜராத் தொழிலதிபர் ஒருவரைப் பாலியல் வலையில் சிக்கவைத்து ரூ.2.69 கோடி பணம் பறித்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மோசடி
News
மோசடி

குஜராத்தில் எரிசக்தி நிறுவனத்தை நடத்திவரும் பிரபல தொழிலதிபர் ஒருவருக்கு, கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மோர்பியைச் சேர்ந்த ரியா ஷர்மா என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பெண்ணிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, இருவரும் வீடியோ காலில் பேசிக்கொள்ள முடிவுசெய்திருக்கிறார்கள். அப்போது அந்தப் பெண், தொழிலதிபர் வீடியோ காலில் இருக்கும்போது, அவருடைய ஆடையை கழற்றுமாறு கூறியிருக்கிறார். அவரும் ஆடையைக் கழற்றி, நிர்வாணமாக வீடியோ கால் பேசியதாகத் தெரிகிறது. அதை அந்தப் பெண் தன்னுடைய போனில் வீடியோ எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து, சில நிமிடங்களில் திடீரென அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.

சித்திரிப்புப் படம்
சித்திரிப்புப் படம்

அதைத் தொடர்ந்து, சில மணி நேரத்தில் அவரின் செல்போனுக்கு அவர் மட்டும் தனியாக இருக்கும் நிர்வாண வீடியோவை அனுப்பியிருக்கிறார்கள். மேலும், அவரை மிரட்டி உடனே ரூ.50.000 அனுப்ப வேண்டும் என வற்புறுத்திப் பணம் பெற்றிருக்கிறார். சில நாள்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவரிடம் டெல்லி காவல்துறையின் இன்ஸ்பெக்டர் குட்டு ஷர்மா என்ற பெயரில் ஒருவர் பேசியிருக்கிறார். அவர் தொழிலதிபரின் நிர்வாண வீடியோ கிளிப் தன்னிடம் இருப்பதாகக் கூறி ரூ.3 லட்சம் பறித்திருக்கிறார்.

ஆகஸ்ட் 14 அன்று, டெல்லி போலீஸ் சைபர் செல் பணியாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட மற்றொரு நபர், அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி ரூ. 80.97 லட்சத்தை வாங்கியிருக்கிறார். அதன் பின்னரும் தொடர்ந்த அழைப்புகளில், வீடியோ கால் செய்த பெண்ணின் தாயார் மத்திய புலனாய்வு நிறுவனத்தை அணுகியதாகவும், இந்தப் புகாரைத் தீர்ப்பதற்கு ரூ 8.5 லட்சம் தர வேண்டும் எனவும், சிபிஐ அதிகாரிபோலப் பேசி பணம் பறித்திருக்கிறார்கள்.

காவல்துறை
காவல்துறை

டிசம்பர் 15-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எனக் கூறி ஒருவர் இந்த வழக்கை முடித்துவிட, குறிப்பிட்ட தொகையைத் தர வேண்டும் எனப் பேசி பணத்தைக் கறந்திருக்கிறார். அதன் பிறகு நீதிமன்ற உத்தரவு என ஒரு நகலையும் அனுப்பியிருக்கிறார். ஆனால், அந்த உத்தரவு நகல் தொழிலதிபரின் சந்தேகத்தைத் தூண்டியதால், ஜனவரி 10-ம் தேதி சைபர் க்ரைம் பிரிவு காவல் நிலையத்தை அணுகி, தன்னிடம் பணம் பறித்த 11 பேர்மீது ரூ.2.69 கோடியை மிரட்டிப் பணம் பறித்ததாகப் புகாரளித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி, ``அந்தத் தொழிலதிபருக்கு சுமார் 11 அழைப்புகள் வந்திருக்கின்றன. கடைசியாக சந்தேகமடைந்த அவர் எங்களிடம் வந்திருக்கிறார். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. ஆனால், தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 387 (பணம் பறித்தல்), 170 (பொது ஊழியராக ஆள்மாறாட்டம் செய்தல்), 465, 420 (ஏமாற்றுதல்), மற்றும் 120-பி (குற்றச்சதி) ஆகிய பிற குற்றங்களின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.