Published:Updated:

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள்: `ஜிலேபி' பாபாவின் பகீர் பின்னணி?

ஜிலேபி பாபா
News
ஜிலேபி பாபா ( ட்விட்டர் )

100-க்கும் மேற்பட்ட பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த, ஜிலேபி சாமியாருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள்: `ஜிலேபி' பாபாவின் பகீர் பின்னணி?

100-க்கும் மேற்பட்ட பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த, ஜிலேபி சாமியாருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

Published:Updated:
ஜிலேபி பாபா
News
ஜிலேபி பாபா ( ட்விட்டர் )

ஹரியானா மாநிலம், ஃபதேஹாபாத்தின் தோஹானா நகரத்தைச் சேர்ந்தவர் அமர்புரி (63). இவர் அந்தப் பகுதியில் `ஜிலேபி பாபா' என மக்களால் அறியப்படுகிறார். தன்னை சாமியார் எனக் கூறிக்கொள்ளும் ஜிலேபி பாபாவை, ஏராளமான பெண்கள் தங்களின் குடும்பச் சிக்கல்களை சரிசெய்வதற்காக சந்தித்துவந்திருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜிலேபி பாபா தன்னைச் சந்திக்கவரும் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்வதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

ஜிலேபி பாபா
ஜிலேபி பாபா
ட்விட்டர்

அதனடிப்படையில், ஜிலேபி பாபாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவருடைய செல்போனில் பல பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து விசாரணையில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள், "ஜிலேபி பாபா தன்னைச் சந்திக்க வரும் பெண்களுக்கு எதோ ஒருவகையில், போதைப்பொருளைக் கொடுத்துவிடுவார். அவர்கள் மயக்க நிலையில் இருக்கும்போது, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவார். அதன் பின்னர், அதை வீடியோவாகப் பதிவுசெய்து, பாதிக்கப்பட்ட பெண்களிடம் அதைக் காண்பித்து மிரட்டி, அடிக்கடி பணம், நகை என பெற்றுவந்திருக்கிறார்" எனக் கூறியிருந்தனர்.

ஜிலேபி பாபா கைது செய்யப்பட்ட போது
ஜிலேபி பாபா கைது செய்யப்பட்ட போது
ட்விட்டர்

இதைத் தொடர்ந்து, வழக்கு பதிவுசெய்த ஹரியானா காவல்துறை, `ஜிலேபி பாபா' எனும் அமர்புரியைக் கைதுசெய்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஃபதேஹாபாத் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இதையடுத்து, அவரிடம் கைப்பற்றப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், நீண்ட விசாரணைக்குப் பின்னர் குற்றம் நிரூபணமானதைத் தொடர்ந்து, கூடுதல் மாவட்ட நீதிபதி பல்வந்த் சிங், அமர்புரி எனும் ஜிலேபி பாபாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.