Published:Updated:

`ஆடம்பரமாக வாழலாம்; காதலன் என இன்ஸ்டாவில் போடச் சொன்னார்’ - சுகேஷுக்கு எதிராக நடிகைகள் புகார்

சுகேஷுக்கு எதிராக நடிகைகள்
News
சுகேஷுக்கு எதிராக நடிகைகள்

காதலியாக சம்மதித்தால் பெரிய வீடு தருவதாகவும், ஆடம்பரமாக வாழலாம் என்றும் சுகேஷ் சந்திரசேகர் தன்னிடம் ஆசைவார்த்தை கூறியதாக நடிகை நோரா ஃபதேஹி தெரிவித்திருக்கிறார்.

`ஆடம்பரமாக வாழலாம்; காதலன் என இன்ஸ்டாவில் போடச் சொன்னார்’ - சுகேஷுக்கு எதிராக நடிகைகள் புகார்

காதலியாக சம்மதித்தால் பெரிய வீடு தருவதாகவும், ஆடம்பரமாக வாழலாம் என்றும் சுகேஷ் சந்திரசேகர் தன்னிடம் ஆசைவார்த்தை கூறியதாக நடிகை நோரா ஃபதேஹி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
சுகேஷுக்கு எதிராக நடிகைகள்
News
சுகேஷுக்கு எதிராக நடிகைகள்

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறித்தது, அரசு அதிகாரிகள் என்று கூறி பணம் பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிற சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து பரிசுப்பொருள்களைப் பெற்றவர்களில் நடிகை நோரா ஃபதேஹி என்பவரும் அடக்கம். அவரிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கின்றனர். நோரா இவ்வழக்கில் சாட்சியாக மாறியிருக்கிறார். அவர் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதில், ``சுகேஷ், காதலியாக சம்மதித்தால் மிகப்பெரிய வீடு தருவதாகவும், ஆடம்பரமாக வாழலாம் என்றும் தெரிவித்தார்.

சுகேஷ்
சுகேஷ்

பிங்கி இரானி, எனது உறவினரை தொடர்புகொண்டு, `சுகேஷ் காதலியாக மாற ஜாக்குலின் பெர்னாண்டஸ் தயாராக இருக்கிறார். ஆனால், சுகேஷ் உங்களைத்தான் விரும்புகிறார். சுகேஷை கவனித்துக்கொள்ள பல நடிகைகள் தயாராக இருக்கின்றனர்’ என்றார். ஆரம்பத்தில் சுகேஷ் யார் என்று எனக்குத் தெரியாது. அதன் பிறகு எல்எஸ் கார்ப்பரேஷன் என்ற கம்பெனியில் வேலை செய்வதாக நினைத்தேன்.

சுகேஷுடன் நேரடியாக நான் பேசிக்கொண்டதும் கிடையாது. தொடர்பு வைத்துக்கொண்டதும் இல்லை. அமலாக்கப்பிரிவு என்னிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பிய பிறகுதான் சுகேஷ் ஒரு கிரிமினல் என்று தெரியவந்தது. அந்தக் குற்றங்கள் பற்றி எனக்குத் தெரியாது. அவரைச் சந்தித்ததும் கிடையாது. அமலாக்கப்பிரிவின் விசாரணையின்போதுதான் முதன் முறையாக அவரைப் பார்த்தேன்” என்றார். மேலும், சுகேஷ் மூலம் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவனிடமிருந்து எந்தவித பண உதவியும் பெற்றுக்கொண்டதில்லை என்றும் அமலாக்கப்பிரிவு விசாரணையில் நோரா தெரிவித்திருக்கிறார். ஆனால், கார் போன்ற ஆடம்பர பரிசுப்பொருள்களை சுகேஷிடமிருந்து பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

நிக்கி தம்போலி
நிக்கி தம்போலி

அமலாக்கப் பிரிவின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருக்கிற மற்றொரு நடிகை நிக்கி தம்போலி. சுகேஷை டெல்லி திகார் சிறைக்குச் சென்று பார்த்துவந்த மற்றொரு நடிகையான நிக்கி தம்போலி கோர்ட்டில் கொடுத்திருக்கிற வாக்குமூலத்தில், ``என்னிடம் சுகேஷ், என்னுடைய காதலன் என்று என் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடும்படி கட்டாயப்படுத்தினார். 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முறையாக சுகேஷை சிறையில் பார்க்கச் சென்றபோது சிறை நுழைவுவாயிலில் எந்தவித பாதுகாப்புச் சோதனையும் இல்லை. அடையாள அட்டையையும் காட்டும்படி கேட்கவில்லை. போலீஸார் என்னுடைய பாதுகாப்புக்கு வந்தனர். சுகேஷ் என்னைச் சந்தித்து பேசிய பிறகு ஒரு விலையுயர்ந்த பேக், 2 லட்சம் பணம் கொடுத்தார். அதைக் கொடுத்துவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடன் நட்பில் இருப்பதாகப் பதிவிடும்படி கட்டாயப்படுத்தினார். அதன் பிறகும் அடிக்கடி எனக்குப் பரிசுப்பொருள்களை அனுப்பிக்கொண்டிருந்தார். அதேசமயம் நான் அவரின் பாய்பிரண்ட் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிடும்படி கட்டாயப்படுத்தினார்” எனப் பதிவிட்டிருக்கிறார்.