Published:Updated:

நீலகிரி: டீக்கடையில் லஞ்சப் பணத்துடன் சிக்கிய நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர்! - நடந்தது என்ன?

லஞ்சம் ( சித்தரிப்புப் படம் )

தடுப்புச் சுவர் கட்டுவதற்கு அனுமதி வழங்க லஞ்சம் கேட்ட நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைதுசெய்தனர்.

நீலகிரி: டீக்கடையில் லஞ்சப் பணத்துடன் சிக்கிய நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர்! - நடந்தது என்ன?

தடுப்புச் சுவர் கட்டுவதற்கு அனுமதி வழங்க லஞ்சம் கேட்ட நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைதுசெய்தனர்.

Published:Updated:
லஞ்சம் ( சித்தரிப்புப் படம் )

கோவையைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவர் அண்மையில் நீலகிரி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, ``நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றிவரும் நித்யா என்ற பெண் ஆய்வாளர் ஒருவர், தடுப்புச் சுவர் கட்டும் அனுமதிக்காக என்னிடம் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்துவருகிறார். நடவடிக்கை எடுங்கள்" எனப் புகார் அளித்திருக்கிறார்.

கைதான நித்யா
கைதான நித்யா

இந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை செந்தில் முருகனிடம் கொடுத்திருக்கின்றனர்.

அதையடுத்து, ஆய்வாளர் நித்யா குன்னூர் அருகிலுள்ள ஒரு தேநீர் கடைக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார். செந்தில் முருகனிடமிருந்து 5,000 ரூபாய் லஞ்சத்தைக் கையில் வாங்கியிருக்கிறார் நித்யா. அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் நித்யாவைக் கையும் களவுமாகப் பிடித்திருக்கின்றனர். `இந்த ஒரு முறை மன்னித்துவிடுங்கள்!' என நித்யா அழுது ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார். அவரை உடனடியாகக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லஞ்ச ஒழிப்புத்துறையினர், ``செந்தில் முருகனுக்குச் சொந்தமான இடம் குன்னூர் பெட்டட்டி பகுதியில் நெடுஞ்சாலை அருகில் இருக்கிறது. நெடுஞ்சாலையை ஒட்டி செந்தில் முருகன் தடுப்புச்சுவர் ஒன்றை அமைத்திருக்கிறார். நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என அந்த தடுப்புச் சுவரை இடித்திருக்கின்றனர். அதே இடத்தில் மீண்டும் தடுப்புச்சுவர் கட்ட செந்தில் முருகன் அனுமதி கேட்டிருக்கிறார்.

கைதான நித்யா
கைதான நித்யா

5,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் அனுமதி வழங்குவதாக நெடுஞ்சாலை ஆய்வாளர் நித்யா எவாலின் கேட்டிருக்கிறார். அவரை ஆதாரத்துடன் பிடித்து, கைதுசெய்தோம். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism