Published:Updated:

'சுப்ரீம் 50', 'சூப்பர் டூப்பர்'... குரூப் 1, 2 தேர்வுகளில் மோசடிகள் அரங்கேறுவது எப்படி?

குரூப் 4 தேர்வு மோசடி
குரூப் 4 தேர்வு மோசடி

தற்போது லேட்டஸ்ட்டாக டி.என்.பி.எஸ்.சி-யில் வெடித்துள்ள குரூப் 4 தேர்வு மோசடி, ராமநாதபுரம் தொடங்கி சென்னை வரை தன் ஆக்டோபஸ் கரங்களை விரித்துள்ளது.

''குரூப்-3, 4 தேர்வுகளில் மோசடியில் ஈடுபடுவது பெரும்பாலும் கீழ்நிலை அதிகாரிகள் என்பதால் தான் சி.பி.சி.ஐ.டி இவ்வளவு வேகம்காட்டுகிறது. இந்தப் பதவிகளுக்கான முறைகேட்டில் சில லட்சங்கள் வரையில்தான் பணம் புரளும். எனவே, உயரதிகாரிகளும் ஆட்சியாளர்களும் இதில் ஆர்வம்காட்டுவதில்லை. இதனால்தான் கீழ்நிலை அதிகாரிகள் அடுத்தடுத்து மாட்டுகி றார்கள். கைது காட்சிகளும் அரங்கேறுகின்றன.

அதேசமயம் குரூப் 1, 2 தேர்வுகளில் நடைபெறும் மோசடிகளில் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று படிநிலைகளில் நடத்தப்படும் குரூப் 1 தேர்வில், முதன்மைத் தேர்வுக்கான கேள்வித்தாள்களை ஆணையத் திலிருந்து ரகசியமாக எடுத்து, சில மாணவர் களுக்காக மட்டும் சில பயிற்சி மையங்கள் வெளியிடுகின்றன. தி.நகரில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையம் ஒன்றில், நேர்காணலில் 75 மதிப்பெண் பெற்றுத் தருவதாக உத்தரவாதம் அளித்து, அதற்கு 12 லட்சம் ரூபாய் கட்டணமும் வசூலித்ததெல்லாம் உண்டு. கீழ்நிலை அதிகாரிகளிடம் வேகம்காட்டும் சி.பி.சி.ஐ.டி போலீஸார், அதே வேகத்தை உயரதிகாரிகளிடமும் பயிற்சி மையங்களிடமும் காட்டினால் பல ஊழல் பூதங்கள் வெளியே வரும்" என்றார், முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர்.

'சுப்ரீம் 50', 'சூப்பர் டூப்பர்'... குரூப் 1, 2 தேர்வுகளில் மோசடிகள் அரங்கேறுவது எப்படி?

"குரூப் 1, 2 தேர்வுகளில் மோசடிகள் எப்படி அரங்கேறுகின்றன?" என்ற கேள்வியுடன் டி.என்.பி.எஸ்.சி-யைச் சேர்ந்த நேர்மையான அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தோம். அவர்கள் கொட்டிய தகவல்கள் அனைத்தும் பகீர்ரகம்!

''அரசு அதிகாரியாகப் பணியமர்ந்து விட்டால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்ற கருத்து மக்களிடம் அதிகமாகியிருக்கிறது. அதனால்தான் போட்டி அதிகமாகி பயிற்சி மையங்கள் மற்றும் புரோக்கர்களின் காட்டில் பணமழை கொட்டுகிறது.

சென்னை தி.நகர் மற்றும் அண்ணாநகரில் உள்ள ஒருசில பயிற்சி மையங்கள் இந்த மோசடியில் கொடிகட்டிப் பறக்கின்றன. மாணவர்கள் பயிற்சிக்கு வரும்போதே, அவர்களின் குடும்பப் பின்னணியை ஆராய்ந்து விடுகின்றனர். குறிப்பாக, ஊழலில் ஊறிய உயரதிகாரிகளின் வாரிசுகளே பெரும்பாலும் இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர். இப்படிச் சேர்க்கப்படும் மாணவர்களின் குழுக்களுக்கு 'சுப்ரீம் 50', சூப்பர் டூப்பர்' என ஏதாவது ஒரு கோடுவேர்டு வைப்பார்கள். இவர்களுக்கு மட்டும் குரூப் 1 தேர்வுகளின் கேள்வித்தாள்கள் முன்கூட்டியே அளிக்கப்பட்டு, பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும். இதற்கென தனிக் கட்டணமும் வசூலிப்பார்கள். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/3aTbLBW

இந்த டீம்களுக்கு பயிற்சி அளிக்கும்போதே, பிரத்யேக பேனாக்களை மட்டும் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் 'ஜெல்' ரக பேனாக்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது பைலட் வி 5, வி 7 ரக பேனாக்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவை, எழுதினால் மறையும் மைகொண்ட பேனாக்கள் அல்ல. தங்கள் மாணவரின் விடைத்தாளை மட்டும் தனியாக அடையாளப்படுத்தும் முயற்சிதான் இது. தங்கள் டீமில் உள்ள மாணவரின் விடைத் தாளை எந்தப் பேராசிரியர் திருத்துகிறார் என்பது வரை பயிற்சி மையங்கள் கண்காணிக் கின்றன. அவரை சரிக்கட்டி விடைத்தாள் திருத்தப்படும் போதும் முறைகேடு செய்கிறார்கள். நேர்காணலில் ஒரு மாணவர் பங்கெடுத்தாலே 40 மதிப்பெண் வழங்கப்பட்டுவிடும். அதிகபட்சம் 80 மதிப்பெண் வழங்கலாம் என்பது விதி. பணம் கொடுத்தால் 80 மதிப்பெண் பெற்றுத் தரவும் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள்" என்றார்கள்.

2018-ம் ஆண்டு வெளியான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணையில் வயது வரம்பு தவறாகக் குறிப்பிடப்பட்டதாகவும், இதனால் ஒன்றரை லட்சம் பேர் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், டி.என்.பி.எஸ்.சி-யில் வெடித்துள்ள குரூப் 4 மோசடி நீதித் துறையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

'சுப்ரீம் 50', 'சூப்பர் டூப்பர்'... குரூப் 1, 2 தேர்வுகளில் மோசடிகள் அரங்கேறுவது எப்படி?

தற்போது லேட்டஸ்ட்டாக டி.என்.பி.எஸ்.சி-யில் வெடித்துள்ள குரூப் 4 தேர்வு மோசடி, ராமநாதபுரம் தொடங்கி சென்னை வரை தன் ஆக்டோபஸ் கரங்களை விரித்துள்ளது. சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்துவரும் இந்த வழக்கில் இதுவரை ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் தேர்வு எழுத, வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு மோசடியில் கைதுசெய்யப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஓம்காந்தன், சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலம் அதிரவைக்கிறது. சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார், 'சதுரங்க வேட்டை' படத்தில் வரும் காட்சிகளையே விஞ்சும் அளவுக்கு மோசடியை அரங்கேற்றியிருப்பது தெரிந்து விக்கித்துப்போயிருக்கிறது போலீஸ். சினிமாவை விஞ்சுகின்றன சேஸிங் காட்சிகள். ஒரு பயணத்திலேயே சிவகங்கை அருகே வினாத்தாள்கள் திருடப்பட்டு, இடையே திருத்தப்பட்டு, பிறகு சென்னையில் சேஸிங்செய்து, மீண்டும் அதே பெட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன. குரூப் 4 தேர்வில் மட்டுமல்ல, குரூப்-1, 2 தேர்வு களிலும் மோசடி நடந்திருப்பதாகச் சொல் கிறார்கள், கோட்டை வட்டாரத்தில் இருக்கும் நேர்மையான அதிகாரிகள் சிலர்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மோசடியின் A to Z பின்னணியை உள்ளடக்கிய ஜூனியர் விகடன் இதழின் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > தமிழ்நாடு புரோக்கர் சர்வீஸ் கமிஷன் https://www.vikatan.com/government-and-politics/crime/tnpsc-scams

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு