Published:Updated:

தங்கை பயணத்தை நிறுத்த சென்னை விமான நிலையத்துக்கு விடுத்த மிரட்டல்... அண்ணன் கைது! நடந்தது என்ன?!

ஓர் அண்ணன் தன் தங்கை தன்னைவிட்டு துபாய் போவதைத் தடுப்பதற்காக விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டலே விடுதிருக்கிறார்.

தங்கை பயணத்தை நிறுத்த சென்னை விமான நிலையத்துக்கு விடுத்த மிரட்டல்... அண்ணன் கைது! நடந்தது என்ன?!

ஓர் அண்ணன் தன் தங்கை தன்னைவிட்டு துபாய் போவதைத் தடுப்பதற்காக விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டலே விடுதிருக்கிறார்.

Published:Updated:

பொதுவாகவே அண்ணன், தங்கச்சி, அக்கா, தம்பி என்று இருக்கும் குடும்பங்களில், அளவுகடந்த பாசத்துக்கும், கண்ணீருக்கும் பஞ்சமே இருக்காது. நேற்றுவரை எலியும், பூனையுமாக வீடடில் சண்டை போட்டுக்கொண்டிருந்தவர்கள், திடீரென்று ஒருநாள் அக்காவோ, தங்கையோ கல்யாணம் செய்துகொண்டு புகுந்தவீட்டுக்குப் போகும்போது ரும் கண்ணீரும், பிரிவும் உணர்ந்தவர்களுக்கு மட்டும்தான் புரியும்.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

இப்படி ஓர் அண்ணன் தன் தங்கைத் தன்னைவிட்டு துபாய் போவதைத் தடுபதற்காக விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டலே விடுத்திருக்கிறார்.

இன்று காலை சரியாக 7:20 மணிக்கு சென்னயிலிருந்து துபாய் போவதற்காக, 167 பயணிகளுடன் இண்டிகோ விமானம் ரெடியாக இருக்க, திடீரென்று விமானம் கிளம்பும் சிறிது நேரத்துக்கு முன்னால் வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. இதனால் கொஞ்ச நேரத்தில் விமான நிலையமே பரபரப்பாக மாற, மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இது வெறும் புரளி என்று தெரியவந்தது. அதன் பின்னர் அந்த விமானமும் கொஞ்சம் தாமதாக துபாய் புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து சைபர் பிரிவு போலீஸ் மூலம் விசாரணை நடந்தது.

இண்டிகோ விமானம்
இண்டிகோ விமானம்

அதில் அந்த போன் நம்பர், சென்னை மணலியைச் சேர்ந்த மாரிசெல்வன் என்பவருடையது எனத் தெரியவந்தது. அடுத்ததாக, மாரிசெல்வனிடம் போலீஸ் விசாரித்தபோது, தன் தங்கை மாரீஸ்வரி, அவரின் கணவருடன் துபாய் போவதாகவும், தங்கையைப் பிரிய மனமில்லாமல்தான் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும், சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து மாரி செல்வன் கைதுசெய்யப்பட்டார்.

`என்னதான் அண்ணன், தங்கச்சி பாசமாக இருந்தாலும் இது கொஞ்சம் இல்லை... ரொம்பவே ஓவர்தான்’ என கமென்ட் அடிக்கிறார்கள் மக்கள். விமானத்திலிருந்த மற்றவர்களைப் பற்றி யோசிக்காமல் இப்படிச் செய்வது பெரிய தப்பு. இது ஒரு தப்பான எடுத்துக்காட்டாகக்கூட அமைந்துவிடும்.