Published:Updated:

திலீப் சொன்ன அந்த `மேடம்’ காவ்யா மாதவனா? - நடிகை பாலியல் வழக்கில் பரபரக்கும் திருப்பங்கள்

காவ்யா மாதவன்

கேரள நடிகை பாலியல் இன்னலுக்கு ஆளான வழக்கில் நடிகர் திலீப் மூளையாகச் செயல்பட்டதாக இதுவரை கருதப்பட்டது. ஆனால் நடிகர் திலீப்பை இயக்கியது அவரது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதால் பரபரத்துக்கிடக்கிறது மலையாள திரை உலகம்.

திலீப் சொன்ன அந்த `மேடம்’ காவ்யா மாதவனா? - நடிகை பாலியல் வழக்கில் பரபரக்கும் திருப்பங்கள்

கேரள நடிகை பாலியல் இன்னலுக்கு ஆளான வழக்கில் நடிகர் திலீப் மூளையாகச் செயல்பட்டதாக இதுவரை கருதப்பட்டது. ஆனால் நடிகர் திலீப்பை இயக்கியது அவரது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதால் பரபரத்துக்கிடக்கிறது மலையாள திரை உலகம்.

Published:Updated:
காவ்யா மாதவன்

சினிமா படபிடிப்பு முடிந்து காரில் திரும்பிய கேரளத்தின் பிரபல நடிகை ஒருவர் 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு கடும் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான வழக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பரபரப்புத் திருப்பங்களுடன் பயணிக்கிறது. நடிகையை காரில் கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் கார் டிரைவரான சுனில்குமார் என்ற பல்சர் சுனி கைதுசெய்யப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில் இறுதியாக நடிகர் திலீப்தான் இதற்கெல்லாம் மூல காரணம் எனத் தெரியவந்தது. அதையடுத்து, திலீப் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார். விசாரணை மந்தமாக நடந்துகொண்டிருந்தபோது சில மாதங்களுக்கு முன்பு திடீரென உள்ளே புகுந்து வழக்கை வேகப்படுத்தியது சினிமா இயக்குநர் பாலசந்திரகுமாரின் வார்த்தைகள்.

திலீப்புக்கு நெருக்கமான நண்பராகத்தான் இருந்தார் பாலசந்திரகுமார். பாலசந்திரகுமாரின் சினிமாவில் திலீப் நடிக்க மறுத்ததால் இருவருக்கும் பிணக்கம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு திலீப்புக்கு எதிராகச் சில ஆதாரங்களை வெளியிட்டார் பாலசந்திரகுமார். பல்சர் சுனியை தனக்குத் தெரியவே தெரியாது என முதலில் கூறிவந்தார் திலீப். ஆனால் நடிகையைப் பாலியல் அத்துமீறல் செய்வதற்கு முன்பே பல்சர் சுனியும் திலீப்பும் நட்பாக இருந்ததாகவும், இருவரையும் ஒன்றாகப் பார்த்திருக்கிறேன் எனவும் பாலசந்திரகுமார் கூறினார். நடிகை பாலியல் கொடுமை செய்யப்பட்ட வீடியோவை திலீப் பார்த்ததாகவும், தன்னைக் கைதுசெய்த போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ய திலீப் சதித்திட்டம் தீட்டினார் எனவும் புதுப்புது தகவல்களை வெளியிட்டார் பாலசந்திரகுமார்.

இதைத் தொடர்ந்து குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணை டாப் கியரில் சென்றது. நடிகை பாலியல் வழக்குடன் அதிகாரிகளைக் கொலைசெய்ய திட்டம் தீட்டியதாக புதிய வழக்கும் திலீப் மீது பாய்ந்தது. திலீப் பயன்படுத்திய மூன்று மொபைல் போன்கள் உட்பட ஆறு போன்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. அந்த போன்களை ஆய்வுசெய்ததில் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனுக்கு எதிரான சில டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

திலீப்பின் சகோதரியின் கணவர் சூரஜின் போனை ஃபாரன்சிக் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், நடிகர் திலீப் அவர் நண்பர் பைஜூ செங்கமனாடு ஆகியோர் பேசியதாகக் கூறப்படும் ஒரு ஆடியோ கிடைத்துள்ளது. அதில், `இது நான் அனுபவிக்கவேண்டிய தண்டனை இல்லை. பெண் ஒருத்தரை காப்பாற்றப்போய் இறுதியாக நான் இந்த தண்டனையை அனுபவித்தேன்' என திலீப் கூறுவதாக அந்த ஆடியோவில் உள்ளது. 2017-ல் பேசிய ஆடியோ இது எனக் கூறப்படுகிறது. ஆனால், அது தன் குரல் இல்லை என திலீப் கூறிவருகிறார். அது திலீப்பின் குரல்தான் என அவரின் முன்னாள் மனைவியான நடிகை மஞ்சு வாரியார் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் கூறியிருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திலீப் கூறும் அந்தப் பெண் காவ்யா என்றும், அவருக்கு எதிராக மேலும் சில ஆதாரங்கள் சிக்கியிருப்பதாலும் அவரை விசாரிக்க குற்றப்பிரிவு போலீஸார் மும்முரம் காட்டுகிறார்களாம். கடந்த 11-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், சென்னையிலிருந்து கொச்சி வருவதற்குக் கால அவகாசம் தேவை, எனவே 13-ம் தேதி புதன்கிழமை ஆலுவாவில் உள்ள தனது வீட்டுக்கு வருவதாகவும், அங்குவைத்து விசாரணை நடத்திக்கொள்ளலாம் எனவும் காவ்யா தரப்பு கூறியுள்ளதாம்.

காவ்யா மாதவன்
காவ்யா மாதவன்

``காவ்யா மாதவன் தன் முதல் கணவரின் வீட்டில் இருக்கும்போதே திலீப்பிடம் நெருக்கம்காட்டியிருக்கிறார். திலீப்பின் முதல் மனைவி மஞ்சுவாரியார் பேறுகாலத்தில் ஓய்வில் இருந்தார். அந்தச் சமயத்தில் திலீப்பிடம் காவ்யா நெருங்கியிருக்கிறார். அமெரிக்கா மற்றும் துபாய் திரைப்பட விழாக்களில் திலீப்புடன், காவ்யா நெருங்கியதை பார்த்த அந்தப் பிரபல நடிகை அது பற்றி மஞ்சு வாரியாரிடம் தகவல் சொல்லியிருக்கிறார். இதையடுத்துதான் திலீப், மஞ்சுவாரியார் பிரிவு ஏற்பட்டது. அதன் பிறகு திலீப்பும் காவ்யா மாதவனும் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டனர். தங்கள் தொடர்பு பற்றிக் கூறிய நடிகைக்குப் பாடம் புகட்ட வேண்டும் என காவ்யா மாதவன் திட்டமிட்டதாகவும், அதற்காக திலீப் உள்ளிட்டவர்களைப் பயன்படுத்திக்கொண்டதாகவும் தற்போதைய விசாரணையில் தெரியவருவதாகச் சொல்லப்படுகிறது.

`இது மேடம் அனுபவிக்கவேண்டிய தண்டனை. அவருக்காக நான் தண்டனை அனுபவிக்கிறேன்' என திலீப் முன்பு சொன்னதாக இயக்குநர் பாலசந்திரகுமார் கூறியிருந்தார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது திலீப் காப்பாற்ற முயன்ற அந்த மேடம் நடிகை காவ்யா மாதவன்தான் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இம்மாதம் 15-ம் தேதிக்குள் (ஏப்ரல் 15) நடிகை பாலியல் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என ஐகோர்ட் கூறியிருந்தது. இப்போது காவ்யா மாதவன் உள்ளே வருவதால் விசாரணைக்காக மேலும் மூன்று மாதம் கால அவகாசம் வேண்டும் என குற்றப்பிரிவு சார்பில் ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டுள்ளது. காவ்யா மாதவனிடம் நடத்தும் விசாரணையில் முக்கியத் தகவல்கள் வெளியாகும்" என்கிறார்கள் இந்த வழக்கு பற்றிய விவரம் தெரிந்தவர்கள்.

இந்த நிலையில், குற்றப்பிரிவு போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்த காவ்யா தாய் சியாமளா, தந்தை மாதவன் ஆகியோர், "எங்கள் மகள் காவ்யாவை வழக்கில் சிக்கவைக்க திலீப் முயல்கிறார்" எனக் கதறியிருக்கிறார்கள்.

சினிமாவுக்கு வெளியே திரை நட்சத்திரங்களுக்குள் நடந்த மோதலில் இன்னும் எத்தனை தலைகள் உருளப்போகின்றனவோ?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism