Published:Updated:

புதுச்சேரி: பெண் பயணியிடம் தகராறு; தட்டிக்கேட்ட இளைஞரையும் இழுத்துச் சென்ற ஏ.எஸ்.ஐ - நடந்தது என்ன?

செல்போனைப் பிடுங்கும் ஏ.எஸ்.ஐ முருகேசன்

தன் உறவினருக்கு சீட் வேண்டும் என்பதற்காக பேருந்தில் அமர்ந்திருந்த பெண் பயணியிடம் தகராறு செய்த புதுச்சேரி காவல்துறை ஏ.எஸ்.ஐ ஒருவர், அவர்களைக் குற்றவாளிகளைப்போல அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

புதுச்சேரி: பெண் பயணியிடம் தகராறு; தட்டிக்கேட்ட இளைஞரையும் இழுத்துச் சென்ற ஏ.எஸ்.ஐ - நடந்தது என்ன?

தன் உறவினருக்கு சீட் வேண்டும் என்பதற்காக பேருந்தில் அமர்ந்திருந்த பெண் பயணியிடம் தகராறு செய்த புதுச்சேரி காவல்துறை ஏ.எஸ்.ஐ ஒருவர், அவர்களைக் குற்றவாளிகளைப்போல அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Published:Updated:
செல்போனைப் பிடுங்கும் ஏ.எஸ்.ஐ முருகேசன்

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 3:15 மணிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்தின் ஏ.சி பஸ் ஒன்று புறப்படத் தயாராக இருந்தது. முன்பதிவுகள் இல்லாததாலும், பல மணி நேரம் பேருந்துக்காக வெயிலில் காத்திருந்ததாலும் பயணிகள் அதில் ஏறி இடம்பிடித்து அமர்ந்தனர். அப்போது அங்கு வந்த உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஏ.எஸ்.ஐ-ஆகப் பணிபுரியும் முருகேசன், இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை அங்கிருந்து எழுந்திருக்குமாறு கூறினார்.

புதுச்சேரி போலீஸ் | ஏ.எஸ்.ஐ முருகேசன்
புதுச்சேரி போலீஸ் | ஏ.எஸ்.ஐ முருகேசன்

அதற்கு அந்தப் பெண் முன்பதிவு இல்லாத பேருந்தில் ஏன் எழ வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஏ.எஸ்.ஐ முருகேசன், அந்த இருக்கையை, தான் ஏற்கெனவே இடம்பிடித்து வைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். பேருந்தின் நடத்துநரும் காவலருக்கு ஆதரவாக நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது இங்கு யாரும் இடம் பிடிக்கவில்லை என்று கூறிய அந்தப் பெண்ணிடம், `இந்த சீட்டை ரிசர்வ் செய்திருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் அந்த ஏ.எஸ்.ஐ. அதற்கு, `இந்த பஸ் ரிசர்வேஷன் இல்லை. அப்படியென்றால் பி.என்.ஆர் எண்ணைக் காட்டுங்கள்’ என்று கேட்ட அந்தப் பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் ஏ.எஸ்.ஐ முருகேசன் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது அந்த வாக்குவாதத்தை அந்தப் பேருந்தில் இருந்த இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்திருக்கிறார். அதில் கோபமடைந்த ஏ.எஸ்.ஐ முருகேசன், `போட்டோ எடுத்ததுக்கு பதில் சொல்லணும்ல’ என்று கூறிக்கொண்டே அந்த இளைஞரிடமிருந்து செல்போனைப் பறித்தார். அதையடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து ஜீப்பை வரவழைத்து, குற்றவாளிகளைப்போல வீடியோ எடுத்த இளைஞர், அந்தப் பெண், அவரின் கணவரை ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.

இந்த விவகாரம் பெரும் பிரச்னை ஆனதை அடுத்து இன்ஸ்பெக்டர் பாபுஜி அனைத்துத் தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். ஏ.எஸ்.ஐ ஒருவர் தன் உறவினருக்காக அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. இந்தக் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism