Published:Updated:

இயக்குநர் ஷங்கர் மருமகன் உள்ளிட்டவர்கள்மீது போக்சோ வழக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இயக்குநர் ஷங்கரின் மருமகன் ரோஹித்
இயக்குநர் ஷங்கரின் மருமகன் ரோஹித்

16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன் ரோஹித் உள்ளிட்ட நான்கு கிரிக்கெட் பயிற்சியாளர்கள்மீது புதுச்சேரியில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி துத்திப்பட்டு கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘சீசெம்’ (Siechem) என்ற தனியார் நிறுவனம் 5 கிரிக்கெட் மைதானங்களை கட்டியிருக்கிறது. இங்கு ’ரஞ்சி’ உள்ளிட்ட போட்டிகளும் இங்கு நடத்தப்பட்டன. அந்த பகுதியில் நீர் நிலைகளையும், அரசு புறம்போக்கு இடங்களையும் ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டிருக்கிறது என்று பல்வேறு சமூக அமைப்புகள் அளித்த புகாரின் அடிப்படையில் ’சீசெம்’ கிரிக்கெட் மைதானத்தின் உரிமையாளர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டார் அப்போதைய கவர்னர் கிரண் பேடி. அனைத்து போட்டிகளையும் உடனடியாக நிறுத்தவும் உத்தரவிட்டிருந்தார்.

பயிற்சியாளர் தாமரைக்கண்னன்
பயிற்சியாளர் தாமரைக்கண்னன்

அதன்படி அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த டி-20 கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டு, 2020 நவம்பர் 11-ம் தேதி கிரிக்கெட் மைதானத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. தற்போது அந்த கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டு கிரிக்கெட் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மைதானம் சீல் வைக்கப்பட்டிருந்தபோது முத்திரைப்பாளையம் இளங்கோவடிகள் அரசுப் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. அதில் கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரும் பயிற்சிக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு பயிற்சியாளராக இருந்த தாமரைக்கண்ணன் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் ஷங்கரின் மருமகன் ரோஹித்
இயக்குநர் ஷங்கரின் மருமகன் ரோஹித்

அதுகுறித்து கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் அதனை தெரிவித்தபோது பயிற்சியாளரை `அட்ஜஸ்ட்' செய்து கொள்ளும்படி கூறிய நிர்வாகிகள், சிறுமி கொடுத்த புகாரையும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சிறுமி தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர், அதற்கு துணையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவிடம் புகாரளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தப் புகாரை விசாரித்த குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யும்படி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துககு உத்தரவிட்டது. அதனடிப்படையில் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது பாலியல் பிரிவிலும், மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், அவரது மகன் ரோஹித் (இயக்குநர் ஷங்கரின் மருமகன்) செயலாளர் வெங்கட், உள்ளிட்டவர்கள் மீது தவறுக்கு உடந்தையாக இருந்ததாகவும் போக்சோ பிரிவின்கீழ் மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

சென்னை: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது! - ஊரடங்கில் அதிகரித்த போக்சோ வழக்குகள்

குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவரான ரோஹித்திற்கும், திரைப்பட இயக்குநர் ஷங்கின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி மகாபலிபுரத்திலுள்ள ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு