Published:Updated:

திருச்சி: குழந்தைகளைக் கிணற்றில் வீசி தானும் குதித்த தாய்; கணவனின் குடிப்பழக்கத்தால் நடந்த சோகம்!

இறப்பு
இறப்பு

``நாங்கதான் வீட்டுகாரரோடு சேர்ந்து வாழணும்னு சொல்லி சமரசம் செஞ்சு அனுப்பிவெச்சோம். ஆனா பாவி மக, பிள்ளைகளைச் சாக அடிச்சுட்டு அவளும் சாவ நினைப்பான்னு கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்கலை."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கணவனின் குடிப்பழக்கத்தை நிறுத்தச்சொல்லி பலமுறை போராட்டம் நடத்தியும் கேட்காததால் மனமுடைந்த மனைவி, தன்னுடைய இரு பெண் குழந்தைகளையும் கிணற்றில் வீசி, தானும் கிணற்றில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி
திருச்சி

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள போதாவூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிய முருகபாண்டியன் - கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு இரண்டரை வயதிலும், ஆறு மாதங்களிலும் இரு பெண் குழந்தைகள் இருந்தனர். கொத்தனாராக வேலை செய்யும் முருகபாண்டியன் தினமும் குடித்துவிட்டுத் தன் மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்திவந்ததாகக் கூறப்படுகிறது.

இவர்கள் இருவருக்கும் சில நாள்களாகக் கருத்து வேறுபாடு இருந்துவந்தது. முருகபாண்டியன் சுதந்திர தினத்தன்று மதுபான கடைகள் மூடியிருந்த நிலையிலும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

ஆன்லைன் ரம்மி: `₹38 லட்சத்தை அவர் இழந்தது சூதாட்டம் இல்லையா?’ - தற்கொலை செய்துகொண்ட விஜயகுமார் மனைவி
உயிரிழந்த குழந்தைகள்
உயிரிழந்த குழந்தைகள்

இதில் ஆத்திரமடைந்த மனைவி கீதா கிணற்றுக்குச் சென்று இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு, தானும் கிணற்றுக்குள் குதித்திருக்கிறார். இதில் கிணற்றுக்குள் வீசப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கிராம மக்கள்
கிராம மக்கள்

உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த கீதாவின் அழுகுரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்துத் தகவலறிந்த சோமரசம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன நடந்தது என்று சத்யாவின் உறவினர்கள் தரப்பில் பேசினோம்.”என் மகள் சாவிற்குக் காரணமே இந்தக் குடிதாங்க. முருகபாண்டி தினமும் குடிச்சிட்டு வந்துவந்து விட்டுல பிரச்னை பண்ணுவாருங்க. இதை எதிர்த்துக்கேட்டா கீதாவை அடிப்பாருங்க. அவரு அடிக்கு தாங்கமுடியாம மூணு, நாலு முறை வீட்டுக்குக் கோவிச்சிக்கிட்டு வந்துட்டாங்க. நாங்கதான் வீட்டுகாராரோடு சேந்து வாழச் சொல்லி சமரசம் செஞ்சி அனுப்பிவச்சோம். ஆனா பாவி மக பிள்ளைகளைச் சாக அடிச்சிட்டு அவளும் சாவ நினைப்பான்னு கொஞ்சம்கூட நினைச்சிப்பாக்கலைங்க. இந்தக் குடியால இந்த குடும்பமே நடுத்தெருவுல வந்திருச்சிங்க” எனக் கதறி அழுத சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு