Published:Updated:

`நான் மேனேஜர்; உங்களுக்கு லோன் வேண்டுமா?!'- போன் காலை நம்பி பணத்தைப் பறிகொடுத்த நபர்கள்!

பர்சனல் லோன்
பர்சனல் லோன்

``நீங்கள் அனுப்பிய டாக்குமென்ட் சரிபார்க்கப்பட்டது. நீங்க லோன் வாங்க தகுதியான நபர்" என்று சொல்லியிருக்கிறார். அவரும், நமக்கு லோன் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் இருந்திருக்கிறார்.

திருச்சி பெரிய மிளகுபாறையைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் ஜெயபிரகாஷ். இவர் கம்ப்யூட்டர் சென்டர் நடத்திவருகிறார். இவரிடம் தொலைபேசியில் பிரசாத் என்பவர், வங்கி ஒன்றில் லோன் மேனேஜராக வேலை பார்ப்பதாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கியிருக்கிறார்.

திருச்சி
திருச்சி

பின்னர் ஆல்பர்ட் ஜெயபிரகாஷிடம், "எங்களது வங்கியில் உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கடன் வழங்க முடிவு செய்திருக்கிறார்கள். நீங்கள் லோன் கேட்டு முயன்றுகொண்டிருப்பது உண்மைதானே... அதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறோம்.

டாக்குமென்ட் சார்ஜ், பிராசஸிங் ஃபீஸ் என ரூ.16,300 செலுத்த வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார். அதற்கு ஆல்பர்ட்டும் அவரை நம்பி அவர் கொடுத்த அக்கவுன்ட் நம்பருக்கு ஏ.டி.எம் டெபாசிட் மெஷின் மூலமாக ரூ.16,300 பணத்தை அனுப்பியிருக்கிறார். பணத்தை அனுப்பியதும் அந்த நபரை ஆல்பர்ட் ஜெயபிரகாஷ் போனில் தொடர்புகொண்டிருக்கிறார்.

திருச்சி ரயில் நிலையம்
திருச்சி ரயில் நிலையம்
DIXITH

அவர் கடைசி வரையிலும் போனை எடுக்கவில்லை. பின்புதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார். அதே நபர் திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்த பீர்முகமது என்பவரைத் தொடர்புகொண்டு, "சார், நீங்க லோனுக்கு முயற்சி செய்கிறீர்களா, நான் லோன் செக்‌ஷனில் லோன் மேனேஜராக

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தில் உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வாங்கித்தருகிறேன்" என்று சொல்லியிருக்கிறார். அவரும் சரி என்றதும், "உங்களுடைய டாக்குமென்ட்டை எனக்கு மெயில் அனுப்புங்கள். நான் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்" என்றதும், அவரும் கேட்ட டாக்குமென்ட்களை அனுப்பியிருக்கிறார்.

பர்சனல் லோன்
பர்சனல் லோன்

பின்னர் போனில் பேசிய அந்த நபர், ``நீங்கள் அனுப்பிய டாக்குமென்ட் சரிபார்க்கப்பட்டது. நீங்க லோன் வாங்க தகுதியான நபர்" என்று சொல்லியிருக்கிறார். அவரும், நமக்கு லோன் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் இருந்திருக்கிறார். உடனே அந்த நபர், ``சார், டாக்குமென்ட் சார்ஜ் மற்றும் பிராசஸிங் ஃபீஸ் என ரூ.7,650 செலுத்த வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார். அதை நம்பி பீர்முகமது அவர் கொடுத்த அக்கவுன்ட்டுக்கு கூகுள் பே மூலமாகப் பணத்தை அனுப்பியிருக்கிறார். பணம் அவரது வங்கிக் கணக்குக்கு வந்த பிறகு அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது.

இதைத் தொடர்ந்து ஏமாற்றப்பட்ட இருவரும் திருச்சி மாநகர சைபர் க்ரைம் போலீஸாரிடம் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி இரு புகார்களின் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த மோசடி மன்னன் மதுரையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

`₹500 வேண்டாம், ₹100 நோட்டா கொடுங்க!' - சில்லறை கேட்பது போல் நூதன மோசடி செய்த கும்பல்; என்ன நடந்தது?
ஆன்லைன் லோன் ஆப்
ஆன்லைன் லோன் ஆப்

என்ன நடந்தது என்று சைபர் க்ரைம் போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். ``இது போன்ற மோசடி வேலைகள் சமீபகாலமாகவே அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. தொழிலை விரிவுபடுத்தவோ, சொந்தப் பிரச்னைக்காகவோ பணத் தேவை இருந்துகொண்டேதான் இருக்கிறது. அவர்களுக்குத்தான் இந்தக் கும்பல் வலைவீசுகிறது. அதேபோல் பேங்க்கில் லோன் வேண்டும் என்று ஒரு முயற்சி செய்தால் அவர்கள் ஒரு நெட்வொர்க் வைத்திருப்பார்கள்போல.

போலி கால் சென்டர்
போலி கால் சென்டர்

அவர்கள் மூலமாகத் தகவலைப் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட நபரிடம் பேசி எளிதாகப் பணத்தைக் கறந்துவிடுகிறார்கள். இப்படித்தான் இந்த இரண்டு பேரும் ஏமாந்திருக்கிறார்கள். விசாரணையில் ஆல்பர்ட் ஜெயபிரகாஷ், பீர்முகமது இவர்கள் இருவரிடம் ரூ. 23,750 மோசடி செய்த அந்த நபர் மதுரை சூரகுண்டு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பது தெரியவந்துள்ளது. அந்த முகவரியில் விசாரித்துப் பார்த்தால் அவர் அங்கு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருக்கும் பிரசாந்த்தை வலைவீசித் தேடிவருகிறோம்" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு