Published:Updated:

உ.பி: நமாஸ் செய்யத் தடை கோரிய இந்து மகாசபா தேசியச் செயலாளர்... போலீஸ் வழக்கு பதிவு!

இந்து மகாசபா - பூஜா ஷகுன் பாண்டே

உத்தரப்பிரதேசத்தில் நமாஸ் செய்வதற்குத் தடைவிதிக்கக் கோரி அறிக்கை வெளியிட்டிருந்த, அகில இந்திய இந்து மகாசபா தேசியச் செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே மீது, போலீஸ் வழக்கு பதிவுசெய்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் நமாஸ் செய்வதற்குத் தடைவிதிக்கக் கோரி அறிக்கை வெளியிட்டிருந்த, அகில இந்திய இந்து மகாசபா தேசியச் செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே மீது, போலீஸ் வழக்கு பதிவுசெய்துள்ளது. பல்வேறு குழுக்களிடையே பகைமையைத் தூண்டும்விதமாகச் செயல்பட்டதாக, பூஜா ஷகுன் பாண்டே மீது அலிகார் போலீஸார் வழக்கு பதிவுசெய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அகில இந்திய இந்து மகாசபா-வின் தலைவர் பாரதிக்கு, அலிகார் நகர மாஜிஸ்ட்ரேட் மூலம் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸுக்கு பதிலளித்த பாரதி, ``எந்த மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தாலும் வருந்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

உ.பி: நமாஸ் செய்யத் தடை கோரிய  இந்து மகாசபா தேசியச் செயலாளர்... போலீஸ் வழக்கு பதிவு!

அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில், பூஜா ஷகுன் பாண்டே மீது காந்தி பார்க் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 153A, 153B, 295A மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதை எஸ்.எஸ்.பி கலாநிதி நைதானி உறுதிப்படுத்தினார்.

இதற்கு முன்னதாக பூஜா ஷகுன் பாண்டே, இதேபோல் சர்ச்சைக்குரிய செயல்களால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். அதிலும் முக்கியமாக, 2019-ல் கோட்சேவைப் புகழ்ந்து பிரார்த்தனை செய்ததற்காக அவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism