Published:Updated:

சிறுவர்களுடன் பேசியதால் ஆத்திரம்; 5-ம் வகுப்பு படிக்கும் மகளைக் கால்வாயில் தள்ளிவிட்ட பெற்றோர் கைது!

அவர்களின் மகள், பல சிறுவர்களுடன் பேசுவது, அநாகரிகமான சைகைகள் போன்றவற்றைச் செய்ததாக ஆத்திரத்தில் அவர்கள் அந்தச் சிறுமியைக் கால்வாயில் தள்ளிவிட்டனர்.

சிறுவர்களுடன் பேசியதால் ஆத்திரம்; 5-ம் வகுப்பு படிக்கும் மகளைக் கால்வாயில் தள்ளிவிட்ட பெற்றோர் கைது!

அவர்களின் மகள், பல சிறுவர்களுடன் பேசுவது, அநாகரிகமான சைகைகள் போன்றவற்றைச் செய்ததாக ஆத்திரத்தில் அவர்கள் அந்தச் சிறுமியைக் கால்வாயில் தள்ளிவிட்டனர்.

Published:Updated:

உத்தரப்பிரதேசத்தில், ஒரு தம்பதியர், 5-ம் வகுப்பு படிக்கும் தங்களின் மகள் மற்ற சிறுவர்களுடன் பேசியதால், கொலை செய்பும் நோக்கத்தில் கால்வாயில் தள்ளிவிட்டுவிட்டு, காணாமல்போனதாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பப்லூ, இவரின் மனைவி ரூபி என அறியப்படும் இந்தத் தம்பதியர், கடந்த செப்டம்பர் 1-ம் தேதியன்று, 5-ம் வகுப்பு படிக்கும் தங்களின் மகள் காணாமல்போய்விட்டதாக போலீஸில் புகாரளித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து போலீஸாரும், பெற்றோரிடம் விசாரணை நடத்தி, காணாமல்போன சிறுமியைத் தீவிரமாகத் தேடிவந்திருக்கின்றனர்.

க்ரைம்
க்ரைம்

இந்த நிலையில், தங்களின் மகளைக் கொலை செய்யும் நோக்கத்தில் கால்வாயில் தள்ளிவிட்ட குற்றச்சாட்டின்பேரில், பப்லுவையும் ரூபியையும் போலீஸார் நேற்று கைதுசெய்திருக்கின்றனர். மேலும், பெற்றோரும் இந்தக் குற்றச்சாட்டை போலீஸாரிடம் ஒப்புக்கொண்டனர்.

பின்னர் இது குறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், ``அவர்களின் மகள், பல சிறுவர்களுடன் பேசுவது மற்றும் அநாகரிகமான சைகைகள் போன்றவற்றைச் செய்ததாக, ஆத்திரத்தில் அவர்கள் அந்தச் சிறுமியைக் கால்வாயில் தள்ளிவிட்டனர்” என்று தெரிவித்தார்.

கைது
கைது

மேலும் இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி கேசவ் குமார், ``5-ம் வகுப்பு படிக்கும் தங்களின் மகள் காணாமல்போய்விட்டதாக பப்லு, அவரின் மனைவி ரூபி இருவரும் செப்டம்பர் 1-ம் தேதி போலீஸில் புகாரளித்தனர். அதைத் தொடர்ந்து விசாரித்ததில், தங்களின் மகளைக் கொலை செய்யும் நோக்கத்தில் கால்வாயில் தள்ளிய குற்றச்சாட்டில் பெற்றோர் கைதுசெய்யப்பட்டனர். வாக்குமூலமு ம் அளித்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அளித்த தகவல்கள் அடிப்படையில் சிறுமியின் உடலைக் கண்டுபிடிக்க முயன்றுவருகிறோம்" எனக் கூறினார். அதுமட்டுமல்லாமல், இந்தச் சம்பவத்தில் சிறுமி இறந்துவிட்டாரா என்பதுகூட முழுமையாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.