Published:Updated:

விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: விசாரணையைத் தொடங்கியது சி.பி.சி.ஐ.டி!

சி.பி.சி.ஐ.டி போலீஸ்

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: விசாரணையைத் தொடங்கியது சி.பி.சி.ஐ.டி!

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Published:Updated:
சி.பி.சி.ஐ.டி போலீஸ்

விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது பட்டியல் இன இளம்பெண்ணை அவரின் காதலன் ஹரிஹரன் உட்பட எட்டுப் பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து இளம்பெண்ணின் காதலனும், விருதுநகர் திமுக இளைஞரணி உறுப்பினருமான ஹரிஹரன், அவருடைய நண்பர்கள் மாடசாமி, பிரவீன், விருதுநகர் 10-வது வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜுனைத் அகமது மற்றும் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் நான்கு பேர் என எட்டுப் பேரை கைதுசெய்தனர். இதில் ஹரிஹரனும் அவரின் நண்பர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளிச் சிறுவர்கள் நான்கு பேரும் மதுரை தெப்பக்குளத்திலுள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி வினோதினி
சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி வினோதினி

இந்நிலையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள ஹரிஹரனும், ஜுனைத் அகமதுவும் திமுக-வைச் சேர்ந்தவர்கள் என்பதால் அரசியல்ரீதியாக இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத் தொடரந்து, இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜுனைத் அகமதுவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இடைநீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இவ்வழக்கில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா, இளம்பெண் தொடர்பான ஆபாச வீடியோ வேறு யாருக்கும் பகிரப்பட்டுள்ளதா என போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக விருதுநகர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு வந்த சி.பி.சி.ஐ.டி காவல் கண்காணிப்பாளர் முத்தரசி, சி.பி.சி.ஐ.டி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன், சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரி வினோதினி, ஆய்வாளர் சாவித்திரி ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சி.பி.சி.ஐ.டி போலீஸ்
சி.பி.சி.ஐ.டி போலீஸ்

தொடர்ந்து வழக்கு ஆவணங்களைப் பெற்றுக்கொண்ட அவர், முதற்கட்டமாக அதிகாரிகளின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரணையை மேற்கொள்ளவிருக்கின்றனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரன், அவருடைய நண்பர்கள், சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்கள் ஆகிய எட்டுப் பேரையும் சி.பி.சி.ஐ.டி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சிறுவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகரிலுள்ள இளையோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது.

இவ்வழக்கை விரைந்து விசாரிக்கும் பொருட்டு மற்ற மாவட்டங்களில் உள்ள சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு விருதுநகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விசாரணையை மேற்கொள்ளவுள்ளனர். மேலும் இளம்பெண் தொடர்பான ஆபாச வீடியோ வேறு யாரேனுக்கும் ஃபார்வேர்ட் செய்யப்பட்டுள்ளதா, இதில் வேறு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை செய்ய சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியை சி.பி.சி.ஐ.டி நாடியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.