Published:Updated:

குஜராத்: முன்னணித் தொழில் நிறுவனத்தில் வருமான வரி சோதனை; ரூ.1,000 கோடி கறுப்புப் பணம் கண்டுபிடிப்பு

வருமான வரி சோதனை ( ட்விட்டர் )

குஜராத்தில் முன்னணித் தொழில் குழுமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் 1,000 கோடி கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

குஜராத்: முன்னணித் தொழில் நிறுவனத்தில் வருமான வரி சோதனை; ரூ.1,000 கோடி கறுப்புப் பணம் கண்டுபிடிப்பு

குஜராத்தில் முன்னணித் தொழில் குழுமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் 1,000 கோடி கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
வருமான வரி சோதனை ( ட்விட்டர் )

குஜராத்தை மையமாகக்கொண்டு முன்னணித் தொழில் குழுமம் ஒன்று இயங்கிவருகிறது. இந்தத் தொழில் குழுமம் ஆபரணங்கள், ஜவுளி, ரசாயனம், ரியல் எஸ்டேட், கல்வி உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக வருமான வரித்துறைக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து ஜூலை 20-ம் தேதி இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் சோதனையைத் தொடங்கினார்கள். கெடா, அகமதாபாத், மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களிலுள்ள 58 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத கறுப்புப் பணம் ரூ.1,000 கோடி கண்டறியப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

வருமான வரித்துறை
வருமான வரித்துறை

இது தொடர்பான தகவல், சி.பி.டி.டி (CBDT) என்று அழைக்கப்படுகிற மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறது. இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.24 கோடி, ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள், தங்கக்கட்டிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சோதனைகளின்போது, கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் தரவுகள், அங்கு பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதற்கு ஆதாரங்களாகச் சிக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!