Published:Updated:

ஐ.டி ரேடாரில் ஆற்காடு திமுக பிரமுகர்... திடீர் ரெய்டின் பின்னணி என்ன?!

ஐ.டி ரெய்டு

ஆற்காடு மாசப்பேட்டையிலிருக்கும் சாரதியின் வீடு உட்பட அலுவலகங்களில் நடைபெற்றுவரும் சோதனை தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

ஐ.டி ரேடாரில் ஆற்காடு திமுக பிரமுகர்... திடீர் ரெய்டின் பின்னணி என்ன?!

ஆற்காடு மாசப்பேட்டையிலிருக்கும் சாரதியின் வீடு உட்பட அலுவலகங்களில் நடைபெற்றுவரும் சோதனை தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

Published:Updated:
ஐ.டி ரெய்டு

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஏ.வி.சாரதிக்குச் சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலையிலிருந்து தீவிர சோதனை நடத்திவருகிறார்கள். அ.தி.மு.க-விலிருந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் தி.மு.க-வில் இணைந்தார் அவர். கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியுடனும் மிக நெருக்கமாக நட்பு பாராட்டிவருகிறார். இந்த நிலையில், ஆற்காடு மாசப்பேட்டையிலிருக்கும் சாரதியின் வீடு உட்பட அலுவலகங்களில் நடைபெற்றுவரும் சோதனை தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

சாரதியின் பின்னணி!

ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க-வின் வர்த்தக அணிச் செயலாளராக இருந்த சாரதி, சட்டமன்றத் தேர்தலில் ஆற்காடு தொகுதியில் போட்டியிட அந்தக் கட்சியில் வாய்ப்பு கேட்டிருந்தார். தனிப்பட்ட செல்வாக்கு, தன் சமூக வாக்குவங்கி போன்றவற்றால் சாரதியின் வெற்றி வாய்ப்பையும் முன்கூட்டியே அவர் ஆதரவாளர்கள் கணித்துவைத்திருந்தனர்.

தொழிலதிபர் ஏ.வி.சாரதி
தொழிலதிபர் ஏ.வி.சாரதி

ஆனால், கூட்டணியிலுள்ள பா.ம.க-வுக்கு ஆற்காடு தொகுதி ஒதுக்கப்பட்டதால், சாரதி தரப்பு கடும் அதிருப்திக்குள்ளானது. ஆற்காடு தொகுதியில் பா.ம.க தோல்வியடைந்ததால், தி.மு.க சார்பில் களமிறங்கியிருந்த சிட்டிங் எம்.எல்.ஏ ஈஸ்வரப்பனே வெற்றிபெற்றார். அ.தி.மு.க தலைமைமீது அதிருப்தியிலிருந்த ஏ.வி.சாரதி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். ‘ஸ்ரீ மூகாம்பிகை’ சிமென்ட் டிரேடிங், டிரான்ஸ்போர்ட் எனப் பல்வேறு தொழில்களைச் செய்துவரும் சாரதி, ஆற்காடு தொகுதியில் மிகுந்த செல்வாக்குடையவராகவும் வலம்வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அமைச்சர் காந்தியுடனும் மிக நெருக்கமாக நட்பு பாராட்டும் சாரதிக்கு விரைவில் கட்சிப் பொறுப்பும் வழங்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, காலையிலிருந்து நடைபெற்றுவரும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை எனத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

சோதனைக்கான காரணம் குறித்தும் சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அ.தி.மு.க ஆட்சியில் சீனியர் அமைச்சராக வலம்வந்த கே.சி.வீரமணியைக் குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சமயம், வீரமணியுடன் ஆற்காடு தொழிலதிபர் ஏ.வி.சாரதி நெருக்கமாக நட்பு பாராட்டிக்கொண்டிருந்தார். இதனால், ரெய்டு லிஸ்ட்டில் சாரதியின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனாலும் சாரதியை வருமான வரித்துறையினர் நெருங்கவில்லை.

அமைச்சர் காந்தி
அமைச்சர் காந்தி

இந்த நிலையில், தி.மு.க ஆட்சி அமைத்தவுடன் கட்சி மாறிய சாரதி, கே.சி.வீரமணியுடனான நட்பையும் முறித்துக்கொண்டார். இப்போது, தி.மு.க அமைச்சர் காந்தியுடன் இருக்கும் நெருக்கம் காரணமாக, உள்ளாட்சித் தேர்தலில் ஏ.வி.சாரதிதான் தி.மு.க வேட்பாளர்களுக்குப் பண உதவி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை வருமான வரித்துறையில் போட்டுக் கொடுத்ததும் தி.மு.க புள்ளிகள் சிலர்தான் என்கிறார்கள். காந்திக்கும் சாரதிக்குமான நட்பில் விரிசல் ஏற்படுத்துவதற்கான முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான முதல் அஸ்திரம்தான் இந்த ரெய்டு என்கிறார்கள் உள்விவரம் அறிந்த ஆளுங்கட்சி நிர்வாகிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism