Published:Updated:

``ரயில்பாதைகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ சதித் திட்டம்!" - இந்திய உளவுத்துறை எச்சரிக்கை

ரயில் தண்டவாளம் ( சித்திரிப்புப் படம் )

ரயில் பாதைகளைக் குறிவைத்து பாகிஸ்தானின் `இன்டர் சர்வீசஸ் உளவுத்துறை' சதித் திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

``ரயில்பாதைகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ சதித் திட்டம்!" - இந்திய உளவுத்துறை எச்சரிக்கை

ரயில் பாதைகளைக் குறிவைத்து பாகிஸ்தானின் `இன்டர் சர்வீசஸ் உளவுத்துறை' சதித் திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Published:Updated:
ரயில் தண்டவாளம் ( சித்திரிப்புப் படம் )

பஞ்சாப் மற்றும் அதன் சுற்றுவட்டார மாநிலங்களில் உள்ள ரயில் பாதைகளைக் குறிவைத்து பாகிஸ்தானின் `இன்டர் சர்வீசஸ் உளவுத்துறை' சதித்திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது தொடர்பாக இந்திய உளவுத்துறை, ``பஞ்சாப் மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களில் ரயில் தண்டவாளங்களைத் தகர்க்க ஐ.எஸ்.ஐ பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருக்கிறது. சரக்கு ரயில்களைத் தாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.

ரயில் பாதை
ரயில் பாதை

மேலும், இந்தியாவிலுள்ள தங்கள் செயற்பாட்டாளர்களுக்கு ரயில் பாதைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த பெரிய அளவில் ஐ.எஸ்.ஐ நிதியுதவி அளித்துவருவதாகத் தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட அதிக அளவில் செலவழித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன" என எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சைபர் தாக்குதல்
சைபர் தாக்குதல்

இதற்கு முன்னதாக லடாக்கில் உள்ள சர்ச்சைக்குரிய இந்திய-சீன எல்லைப் பகுதியிலிருக்கும் சுமார் ஏழு மின்சாரக் கட்டமைப்புகளை ஹேக்கர்கள் சிலர் சீன அரசின் உதவியுடன் ஹேக் செய்து, சைபர் தாக்குதலை மேற்கொண்டுவருவதாகவும், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் மின்சாரக் கட்டமைப்புகளை இலக்காகக்கொண்டு இணையவழி ஊடுருவல் நடந்திருப்பதாகவும் தனியார் உளவுத்துறை நிறுவனமான `ரெக்கார்ட் ஃபியூச்சர்' அறிக்கை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism