Published:Updated:

மாமூல்கேட்டு நெருக்கடி; டிரான்ஸ்ஃபராகியும் விடுப்பு எடுத்து வசூல் வேட்டை - போலீஸ் ஏட்டு கைது பின்னணி

போலீஸ் ஏட்டு கைது

செம்மரக் கடத்தல் வழக்குப் போட்டு விடுவதாக மிரட்டி விவசாயியிடமிருந்து லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மாமூல்கேட்டு நெருக்கடி; டிரான்ஸ்ஃபராகியும் விடுப்பு எடுத்து வசூல் வேட்டை - போலீஸ் ஏட்டு கைது பின்னணி

செம்மரக் கடத்தல் வழக்குப் போட்டு விடுவதாக மிரட்டி விவசாயியிடமிருந்து லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
போலீஸ் ஏட்டு கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலை சிந்தாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், விவசாயி. இவர், தனக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் விவசாய நிலத்தில் செங்கல் சூளையும் வைத்துள்ளார். சூளைக்குத் தேவையான காய்ந்த விறகுகள் மற்றும் மரக்கட்டைகளை அங்கிருக்கும் காட்டிலிருந்து சேகரித்து, தனது டிராக்டரிலேயே கொண்டுச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சில நேரங்களில், காய்ந்து பட்டுப்போன மரங்களையும் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டுப்பிடித்த ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தின் தனிப்பிரிவு ஏட்டு விஜய், கோவிந்தராஜை அணுகி ரூ.1 லட்சம் மாமூல் கேட்டிருக்கிறார்.

‘மாமூல் கொடுக்க வில்லையென்றால், செம்மரங்களை வெட்டி கடத்தியதாக பொய் வழக்குப் பதிவு செய்து, உள்ளே தள்ளிவிடுவேன்’ என்றும் மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. கடைசியாக ஐம்பதாயிரம் ரூபாயாக மாமூல் பேரத்தை பேசி முடித்திருக்கிறார் ஏட்டு விஜய்.

ஜமுனாமரத்தூர் காவல் நிலையம்
ஜமுனாமரத்தூர் காவல் நிலையம்

‘தன்னிடம், தற்போது அவ்வளவுப் பணம் இல்லை’ என்று கூறி 10 நாள்கள் அவகாசம் கேட்டிருக்கிறார் கோவிந்தராஜ். இதனிடையே, ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்திலிருந்து வாணாபுரம் காவல் நிலையத்துக்குப் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார் ஏட்டு விஜய். கேட்ட இடங்களில் மாமூல் வசூலாகாததால், ஒரு வாரம் விடுப்பு எடுத்து கொண்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் விடுபட்ட இடங்களில் வசூல் வேட்டையை முடித்துவிட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டாராம். அதன்படி, கோவிந்தராஜுவிடமும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தார். இருவரும் நேற்றைய தினமும் பேசியிருக்கிறார்கள். அப்போது, `தன்னிடம் ரூ.15 ஆயிரம்தான் இருக்கிறது. அதைக் கொடுக்கிறேன்’ என்று கோவிந்தராஜ் சொன்னவுடன், ஏட்டுவும் ‘ஓக்கே’ சொல்லி அவர் வரச்சொன்ன இடத்துக்குப் புறப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முன்னதாக, பணம் கொடுக்க விரும்பமில்லாத கோவிந்தராஜ், இது சம்பந்தமாக திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகாரளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி வேல்முருகன் தலைமையிலான போலீஸார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கோவிந்தராஜிடம் கொடுத்து அனுப்பினர். திட்டமிட்டியே, திருவண்ணாமலையிலிருந்து வாணாபுரம் செல்லும் சாலையில் ஏட்டு விஜய்க்காக பணத்துடன் காத்திருந்தார் கோவிந்தராஜ். ஏட்டு வந்தவுடன் அந்தப் பணத்தை கையில் வாங்கினார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார், ஏட்டு விஜய்யை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

ஏட்டு விஜய்
ஏட்டு விஜய்

ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஏட்டு விஜய் பணியிலிருந்துள்ளார். அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் கூட்டம் அதிகம் சுற்றுகிறது. அதேபோல, அங்கிருந்துதான் செம்மரக்கடத்தலுக்காக ஆந்திர வனப்பகுதிகளுக்கு கூலிக்காக ஆட்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதனையெல்லாம் கண்டுகொள்ளாமலிருப்பதற்காக, மலையிலிருக்கும் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்துக்கு சட்டவிரோத கும்பல்களால் மாமூல் கொட்டப்படுகிறது என்பது தகவல். இதனால் தான் அந்தக் காவல் நிலையத்தில் பணிபுரிவதற்காக ‘நீயா... நானா?’ என்று காவலர்களுக்குள் போட்டியே நடக்கிறது. அப்படி ஆசைப்பட்டு வந்தவர்தான் ஏட்டு விஜய் என்கிறார்கள். அவருடைய சொத்து மதிப்பும் கிடுகிடுவென உயர்ந்திருப்பதாகவும், அதனை கணக்கிட்டு வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.