Published:Updated:

உதவியாளரால் நீதிபதிக்குக் கத்திக் குத்து; சேலத்தில் குறுக்கு விசாரணைக்கு ஆஜரான நீதிபதி!

கத்திக் குத்து

சேலம் நீதிமன்றத்தில் நீதிபதி கத்தியால் குத்தப்பட்ட வழக்கில், நீதிபதியிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உதவியாளரால் நீதிபதிக்குக் கத்திக் குத்து; சேலத்தில் குறுக்கு விசாரணைக்கு ஆஜரான நீதிபதி!

சேலம் நீதிமன்றத்தில் நீதிபதி கத்தியால் குத்தப்பட்ட வழக்கில், நீதிபதியிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Published:Updated:
கத்திக் குத்து

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 4-வது நீதித்துறை நடுவராகப் பணியாற்றிவந்தவர் பொன் பாண்டியன். இவர் கடந்த மார்ச் மாதம் சேலத்தில் பணியாற்றியபோது, அலுவலக உதவியாளரான பிரகாஷ் என்பவர் இவரைக் கத்தியால் குத்த முற்பட்டு, சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து சம்பந்தப்பட்ட பிரகாஷிடம் விசாரணை செய்தபோது, தனக்கு திடீர் பணிமாறுதல் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு நீதிபதி பொன் பாண்டியன்தான் காரணம் என்றும், அதனால் அவரைக் கொலைசெய்ய முயன்றதாகவும் கூறினார்.

நீதிபதி
நீதிபதி

அதனடிப்படையில், போலீஸார் அலுவலக ஊழியரான பிரகாஷைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய நீதிபதி பொன் பாண்டியன் பணிமாறுதல் காரணமாக வேறு ஊருக்கு மாற்றலானார். இந்த வழக்கு சேலம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி ரவி முன்னிலையில் நீதிபதி பொன் பாண்டியன் ஆஜரானார். அவரிடம் மூத்த வழக்கறிஞர் பா.ப.மோகன் ஒரு மணி நேரம் குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.