Published:Updated:

``எதுக்கு சார் டிரான்ஸ்ஃபர் போட்டீங்க!’’ -சேலத்தில் நீதிபதியைக் கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர்

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

நீதிமன்றத்தில் வைத்தே நீதிபதி கத்தியால் குத்தப்பட்டிருக்கும் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

``எதுக்கு சார் டிரான்ஸ்ஃபர் போட்டீங்க!’’ -சேலத்தில் நீதிபதியைக் கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர்

நீதிமன்றத்தில் வைத்தே நீதிபதி கத்தியால் குத்தப்பட்டிருக்கும் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் பொன்.பாண்டியன். வழக்கம்போல் இன்று பணிக்கு வந்த நீதிபதி பொன்.பாண்டியன் தன்னுடைய அறையில் வழக்கு விசாரணை குறித்து குறிப்பு எடுத்துக்கொண்டு இருந்திருக்கிறார். இந்நிலையில் திடீரென அவரின் அறைக்குள் நுழைந்த அலுவலக உதவியாளரான பிரகாஷ் என்பவர், தான் மறைத்துவைத்திருந்த கத்தி ஒன்றை ஏந்தியபடி நீதிபதியைத் தாக்க முற்பட்டிருக்கிறார். இதைப் பார்த்து சுதாரித்த நீதிபதி பொன்.பாண்டியன், பிரகாஷைத் தடுத்து நிறுத்தி தாக்குதலிலிருந்து தப்பித்ததோடு, அலறியபடி வெளியே ஒடி வந்துள்ளார். இருந்தபோதிலும் அவருக்கு மார்புப் பகுதியில் லேசாக வெட்டுக்காயம் ஏற்பட்டிருக்கிறது.

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

உடனே நீதிமன்றத்திலிருந்த ஊழியர்கள், போலீஸார் நீதிபதி பொன்.பாண்டியனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட அலுவலக உதவியாளரான பிரகாஷை சேலம் அஸ்தம்பட்டி போலீஸார் கைதுசெய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதற்கட்ட விசாரணையில், ``சேலம் அன்னதானப்பட்டி அருகிலுள்ள வள்ளுவர் நகரைச் சேர்ந்த அங்கமுத்து என்பவரின் மகன்தான் இந்த பிரகாஷ் (37). கடந்த 2015-ம் ஆண்டு சங்ககிரி கோர்ட்டில் வாட்ச்மேனாகப் பணியில் சேர்ந்துள்ளார். 2019-ம் ஆண்டு பதவி உயர்வுபெற்று மேட்டூர் கோர்ட்டில் அலுவலக உதவியாளர் ஆகியிருக்கிறார். அதன் பிறகு ஓமலூர் கோர்ட்டுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அங்கிருந்து சேலம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். பலமுறை டிரான்ஸ்ஃபரில் தூக்கியடிக்கப்பட்ட பிரகாஷுக்கு, இந்த டிரான்ஸ்ஃபர் கடும் மன உளைச்சலைக் கொடுத்திருக்கிறது. எனவே, தன்னுடைய இந்த டிரான்ஸ்ஃபருக்கு நீதிபதி பொன்.பாண்டியன்தான் காரணம் என அவரைத் தாக்க முயன்றிருக்கிறார்' எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கைது
கைது
சித்தரிப்புப் படம்

வழக்கறிஞர்கள், காவல்துறையினர் எனப் பரபரப்பாக இருக்கும் நீதிமன்றத்தில் வைத்தே நீதிபதியைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism