Published:Updated:

சிறைக் கைதி காதலியுடன் இருக்க, விடுதியில் காவல் இருந்த காவலர்கள்! - கர்நாடகாவில் அதிர்ச்சி

கைது ( ட்விட்டர் )

பச்சா கானை சிறைச் சாலைக்கு அழைத்துச் செல்லவேண்டிய காவலர்களே, அவரின் அறைக்குக் காவல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சிறைக் கைதி காதலியுடன் இருக்க, விடுதியில் காவல் இருந்த காவலர்கள்! - கர்நாடகாவில் அதிர்ச்சி

பச்சா கானை சிறைச் சாலைக்கு அழைத்துச் செல்லவேண்டிய காவலர்களே, அவரின் அறைக்குக் காவல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
கைது ( ட்விட்டர் )

கர்நாடகாவில் கடந்த 2020-ம் ஆண்டு, இர்பான் என்ற நபர் சொத்துத் தகராறு காரணமாக கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் பச்சா கான் என்ற நபர் கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை பச்சா கான் விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

அதன் பிறகு கோர்ட்டிலிருந்து சிறைக்குச் செல்லும் வழியில், கொலைக் குற்றவாளியை தார்வாடில் உள்ள ஒரு லாட்ஜில், தனது காதலியுடன் நேரத்தை செலவிட காவல்துறை அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியான தகவலில், பெங்களூரில் வசிக்கும் பச்சா கானின் காதலி தார்வாடில் உள்ள ஒரு லாட்ஜில் அறையைப் பதிவுசெய்திருக்கிறார்.

கர்நாடக காவல்துறை
கர்நாடக காவல்துறை
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து காவலர்கள், பச்சா கானை அவரின் காதலியுடன் நேரம் செலவிட அனுமதித்திருக்கின்றனர். மேலும், பச்சா கானை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லவேண்டிய காவலர்களே அவரின் அறைக்குக் காவல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, வித்யாகிரி பகுதி காவலர்கள் அந்த விடுதியில் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போதுதான் இந்தச் சம்பவம் தெரியவந்திருக்கிறது. சோதனையிட்ட காவலர்கள் பச்சா கானை அவர்களின் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து, காவலர்கள், விசாரணைக் கைதிமீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.