Election bannerElection banner
Published:Updated:

கரூர்: பிரசவத்துக்குச் சென்ற மனைவி; வீடு திரும்பாத சோகம்! - இளைஞர் எடுத்த விபரீத முடிவு

கரூர் ரயில்வே ஸ்டேஷன்
கரூர் ரயில்வே ஸ்டேஷன் ( நா.ராஜமுருகன் )

கடந்த சில நாள்களாக விரக்தியின் உச்சத்திலிருந்த கார்த்திகேயன், ஏப்ரல் 20-ம் தேதி இரவு கரூர் - திருச்சி ரயில் பாதையிலுள்ள புலியூர் ரவி பாளையம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்டார்.

பிரசவத்துக்குப் பிறந்த வீட்டுக்குச் சென்ற மனைவி திரும்பாததால், விரக்தியில் இளைஞர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் ரயில்வே ஸ்டேஷன்
கரூர் ரயில்வே ஸ்டேஷன்
நா.ராஜமுருகன்
கரூர்: நிச்சயதார்த்தம்; பெண் வீட்டில் திடீர் மறுப்பு?! - விபரீத முடிவெடுத்த விரிவுரையாளர்

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள புலியூர் பகுதியில் வசித்துவருபவர் கார்த்திகேயன் (வயது 32). ஊராட்சிச் செயலராகப் பணியாற்றிவருகிறார். அவரது மனைவி பிரசவத்துக்காகப் பிறந்த வீட்டுக்குச் சென்றாராம். ஆனால், கடந்த ஓராண்டுக்கு முன்பு, அவரது மனைவி பிரசவ காலம் முடிவடைந்த பின்னும், குடித்தனம் நடத்துவதற்குத் திரும்பாததால், கார்த்திகேயன் விரக்தியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மனைவியைப் பலமுறை அழைத்தும் அவர் வரவில்லையாம். இந்தநிலையில், கடந்த சில நாள்களாக விரக்தியின் உச்சத்தில் இருந்த கார்த்திகேயன், ஏப்ரல் 20 -ம் தேதி இரவு கரூர் - திருச்சி ரயில் பாதையிலுள்ள புலியூர் ரவி பாளையம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.

கரூர் மருத்துவக் கல்லூரி
கரூர் மருத்துவக் கல்லூரி
நா.ராஜமுருகன்

அதன்படி, அந்த வழியாக ரயில் வரும்போது தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்துக்கொண்டார். அந்த வழியாக வந்த ரயில் மோதி, கார்த்திகேயனின் தலை துண்டாகி, பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து, கார்த்திகேயன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பிரசவத்துக்குச் சென்ற பிறகு மனைவி தன்னோடு சேர்ந்து வாழ மறுத்ததால், விரக்தியடைந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு