Published:Updated:

பாலியல் வீடியோ கசிந்த விவகாரம்: விசாரணை கேட்டு நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு!

கேரள உயர் நீதிமன்றத்தில் மனு அளித்த நடிகை
News
கேரள உயர் நீதிமன்றத்தில் மனு அளித்த நடிகை

`நீதிமன்றத்தில் உள்ள மெமரி கார்டில் இருப்பது எனது வீடியோ. அது கசிந்தால் எனது எதிர்காலத்தை பாதிக்கும். நீதிமன்ற கஸ்டடியில் இருந்த வீடியோவை யாரோ பரிசோதித்திருக்கிறார்கள். அது பற்றி விசாரிக்க வேண்டும்' என பாதிக்கப்பட்ட நடிகை மனுவில் கூறியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான வழக்கில் நடிகர் திலீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த நிலையில் நீதிமன்ற கஸ்டடியில் இருந்த மெமரி கார்டிலிருந்து பாலியல் வீடியோ வெளியே கசிந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறார். வீடியோ கசிந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என இதற்கு முன்பு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு நடிகை கடிதம் எழுதி பரபரப்பைக் கிளப்பினார். 2018- ம் ஆண்டு, டிசம்பர் 13-ம் தேதி பிரின்ஸிபல் செஷன்ஸ் கோர்ட்டின் வசமிருந்த மெமரி கார்டின் ஹாஸ் வேல்யூ (Hash Value) மாறியதாக ஏற்கெனவே நடந்த விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து நீதிமன்ற ஊழியர்களிடம் விசாரணை நடத்த க்ரைம் பிராஞ்ச் அனுமதி கேட்டபோது, நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்தது. இந்த நிலையில் வீடியோ வெளியானது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறார்.

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

நடிகை உயர் நீதிமன்றத்தில் அளித்திருக்கும் மனுவில், ``நீதிமன்ற கஸ்டடியிலுள்ள மெமரி கார்டில் இருந்த காட்சிகள் வெளியான சம்பவத்தில் விசாரணை நடத்த வேண்டும். அந்த மெமரி கார்டில் இருந்தவை எனக்கு எதிராக நடந்த கொடுமைகள் அடங்கிய காட்சிகள். அதை வெளியேவிட்டது யார் என்பது தெரிய வேண்டும். நீதிமன்றத்தில் உள்ள மெமரி கார்டில் இருப்பது எனது வீடியோ. அது வெளியே கசிந்தால் எனது எதிர்காலத்தை பாதிக்கும். நீதிமன்ற கஸ்டடியில் இருந்த வீடியோவை யாரோ பரிசோதித்திருக்கிறார்கள். அது பற்றி விசாரிக்க வேண்டும்" எனக் கூறியிருக்கிரார்.

நீதிமன்றத்தில் இருந்த மெமரி கார்டிலிருந்து வீடியோ வெளியான விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞரும் ஏற்கெனவே கோரிக்கை முன்வைத்திருந்தார். நடிகை பாலியல் வழக்கு விசாரணையை நீட்டிப்பதற்காக இது போன்று மனு அளிக்கப்படுகிறதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், நடிகை பாலியல் வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க வரும் ஜூலை 15-ம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. அதே சமயம் வீடியோ நீதிமன்றத்திலிருந்து வெளியானதா, இல்லையா என ஆய்வு செய்ய இரண்டு அல்லது மூன்று நாள்கள் போதும் என அரசு வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.