Published:Updated:

டாலர் கடத்த உதவினாரா பினராயி விஜயன்?! - ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலத்தால் சர்ச்சை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

ஸ்வப்னா, ஸரித் ஆகியோர் வாக்குமூலத்தில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்த இயலவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால்தான் இது குறித்து முதல்வரிடம் விசாரணை நடத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக விமானத்தில் தங்கம் கடத்திய வழக்கு கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து திருவனந்தபுரத்திலுள்ள யு.ஏ.இ தூதரகத்துக்குச் செல்லும் பார்சல்களை விமான நிலையத்தில் சோதனை செய்வது இல்லை. இதைப் பயன்படுத்தி திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரகத்தின் முன்னாள் ஊழியர்களான ஸரித் மற்றும் ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் பலமுறை தங்கம் கடத்தியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, ஜூலை மாதம் உணவுப் பொருள்கள் என்ற பெயரில் யு.ஏ.இ தூதரகத்துக்கு பார்சலில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அந்த பார்சலை பெற்றுக்கொள்ள யு.ஏ.இ தூதரகக் கடிதத்துடன் விமான நிலையத்துக்குச் சென்ற யு.ஏ.இ தூதரக முன்னாள் ஊழியர் ஸரித் குமார் கைதுசெய்யப்பட்டார். மேலும் முக்கியக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 ஸ்வப்னா சுரேஷ்
ஸ்வப்னா சுரேஷ்

ஸரித் குமார் , ஸ்வப்னாவிடம் அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல மத்திய அரசு ஏஜென்சிகள் விசாரணை நடத்திவருகின்றன. இந்தநிலையில், 2017-ல் முதல்வர் பினராயி விஜயன் வளைகுடா நாடுகளுக்குப் பயணம் செய்தபோது டாலர் கடத்தப்பட்டதாக சுங்கத்துறை விசாரணையில் தெரியவந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தங்கம் கடத்தல் வழக்கு: 98 நாள்கள் சிறை... 3 வழக்கிலும் ஜாமீன்! புத்தகத்துடன் வெளியேறிய சிவசங்கரன்!

தூதரக அதிகாரியைத் தவிர்த்து வேறு யாராவது கடத்துவதில் ஈடுபட்டார்களா என சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்வப்னாவிடம் கேட்டதற்கு முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனும், முதலமைச்சர் பினராயி விஜயனும் டாலர் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக அவர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்வப்னா வழக்கு
ஸ்வப்னா வழக்கு

முதல்வர் பினராயி விஜயன் பெயரைப் பயன்படுத்தி ஒரு பாக்கெட் கைமாறியதாகவும், அந்த பாக்கெட்டில் டாலர் இருந்ததாகவும் ஸ்வப்னா தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறாராம். ஆனால் ஸ்வப்னா, ஸரித் ஆகியோர் வாக்குமூலத்திலுள்ள தகவல்களை உறுதிப்படுத்த இயலவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால்தான் இது குறித்து முதல்வரிடம் விசாரணை நடத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.

`பினராயி விஜயனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல நிர்பந்திக்கிறார்கள்’ - ஸ்வப்னா ஆடியோ பரபரப்பு
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு