அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள சித்துடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவர் தனியார் பேருந்து டிரைவர். 17 வயது சிறுமி, கடந்த ஆண்டு, மார்ச் மாதம் அவரின் பாட்டி வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது, ராஜதுரை அந்தச் சிறுமியைக் காதலிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் அந்தச் சிறுமி. தன்னை வெறுத்த காரணத்துக்காக ஆத்திரத்தில் ராஜதுரை அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சிறுமி தன் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
புகாரின்பேரில் போலீஸார் சித்துடையார் கிராமத்துக்குச் சென்று ராஜதுரையை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில், சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார் உண்மை எனத் தெரியவந்ததையடுத்து ராஜதுரை மீது வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடமாக நடைபெற்றுவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றவாளி ராஜதுரைக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.