Published:Updated:

கோவை: ஆபரேஷன் கந்துவட்டி; ஒரே நாளில் 17 பேர் கைது; கட்டுக் கட்டாகச் சிக்கிய ஆவணங்கள்- போலீஸ் அதிரடி

கந்துவட்டி தொடர்பாக காவல்துறையினர் இன்று பல்வேறு இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர்.

கோவை: ஆபரேஷன் கந்துவட்டி; ஒரே நாளில் 17 பேர் கைது; கட்டுக் கட்டாகச் சிக்கிய ஆவணங்கள்- போலீஸ் அதிரடி

கந்துவட்டி தொடர்பாக காவல்துறையினர் இன்று பல்வேறு இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர்.

Published:Updated:

கந்துவட்டி கொடுமைகளைக் கட்டுப்படுத்தும்விதமாக, டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவுப்படி போலீஸார் `ஆபரேஷன் கந்துவட்டி’ என்ற பெயரில் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில், கந்துவட்டி தொடர்பாக காவல்துறையினர் இன்று பல்வேறு இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர்.

கந்துவட்டி
கந்துவட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில், ஆறு துணை கண்காணிப்பாளர்கள், 20 ஆய்வாளர்கள் மற்றும் 80 காவலர்கள் சோதனையில் இறங்கினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மொத்தம் 41 இடங்களில் திடீரென போலீஸார் அதிரடியாக ரெய்டு நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் ஆவணங்களை வாங்கிவைத்து, கந்துவட்டிக்குப் பணம் கொடுத்துவந்த 17 பேர் மீது வழக்கு பதிந்து கைதுசெய்தனர்.

பணம்
பணம்

அவர்களிடமிருந்து சுமார் ரூ.1.29 கோடி ரொக்கம், 379 நிலம் பத்திரங்கள், 79 உறுதிமொழி பத்திரங்கள், 127 நிரப்பப்படாத காசோலைகள், வெற்றுக் காகிதத்தில் கையெழுத்திட்ட 54 பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும். 48 ஏ.டி.எம் அட்டைகள், 211 வண்டிகளின் ஆர்.சி புத்தகங்கள், 35 நிதி பேரேடுகள், ஏழு ஆதார் கார்டுகள், மூன்று பாஸ்போர்ட்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கந்துவட்டி
கந்துவட்டி

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், ``கந்துவட்டிக்கு எதிரான இந்த நடவடிக்கை தொடரும். இது தொடர்பாக எந்தப் புகார் இருந்தாலும், மக்கள் தயங்காமல் முன்வந்து தெரிவிக்கலாம். அந்தப் புகார்மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.