Published:Updated:

``கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு ஸ்டாலின் அரசும், அவரின் காவல்துறையும்தான் முழு காரணம்!" - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
Live Update
எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

17 Jul 2022 2 PM

கல்வீச்சு, தடியடி... பதற்றத்தில் சின்னசேலம்!

17 Jul 2022 5 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு ஸ்டாலின் அரசும், அவரின் காவல்துறையும்தான் காரணம்!" - எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு ஸ்டாலின் அரசுதான் முழுக்க முழுக்க காரணம் என தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசும், அவரின் கீழ் இயங்கும் காவல்துறையும்தான் முழுக்க முழுக்க காரணம். தமிழ்நாட்டில் மாணவிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. மாநிலத்தின் உளவுத்துறை செயலற்றுக் கிடக்கிறது" என்றார்.

17 Jul 2022 2 PM

``மக்கள் அரசு மேல் நம்பிக்கை வைத்து அமைதி காக்க வேண்டும்!" - முதல்வர் ஸ்டாலின்

சின்னசேலம் அருகே பொதுமக்கள் போராட்டம் கலவரமாக வெடித்திருக்கும் நிலையில், ``அரசு மேல் நம்பிக்கை வைத்து பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்" என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், ``கள்ளக்குறிச்சியில் நிலவி வரும் சூழல் வருத்தம் அளிக்கிறது. மாணவி மரணம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை முடிவில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர். அரசு மேல் நம்பிக்கை வைத்து பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

17 Jul 2022 2 PM

மக்கள் ஆளும் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்! - அண்ணாமலை

சின்னசேலம் கலவரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ``மக்கள் ஆளும் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார், மாணவி ஸ்ரீமதியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது." எனத் தெரிவித்திருக்கிறார்

17 Jul 2022 11 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவியின் மர்ம மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 13-ம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அந்த மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து விட்டனர். இந்த சூழலில் மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பல்வேறு மாணவ அமைப்பினர், பெற்றோர்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

இந்த நிலையில், மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில் போலீசார் தடியடி நடத்தினார்கள். போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் போராட்டத்தில் போலீஸ் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டக்காரர்களின் தாக்குதலில் டிஐஜி பாண்டியன் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, கள்ளக்குறிச்சியில் கலவரத்தை கட்டுப்படுத்த கடலூரிலிருந்து 150 போலீஸார் விரைந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக, ``கலவரக்காரர்கள் யாராக இருந்தாலும் வீடியோ பதிவின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சின்ன சேலத்தில் போராட்டம் செய்பவர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பொருள்களைச் சேதப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. காவலர்களை தாக்கியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது திட்டமிட்ட வன்முறை போலவே தெரிகிறது. போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும்" என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்திருக்கிறார்.