கடந்த சனிக்கிழமை இரவு மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான ஹுகும் சிங் கரடவின் மகன் ரோஹிதாப் சிங், மத்தியப் பிரதேசத்தின் செஹூர் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது காருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த தொழிலதிபர் தினேஷ் அஹுஜாவின் கார்மீது, ரோஹிதாப் சிங்கின் கார் மோதியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அந்தத் தொழிலதிபர் காரை நிறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ மகனிடம் நஷ்டஈடு கேட்டிருக்கிறார். அப்போதுதான், அவர் குடித்துவிட்டு நிதானமிழந்து வாகனம் ஓட்டிவந்தது தெரியவந்தது. உடனே தொழிலதிபர் தினேஷ் அஹுஜா, ரோஹிதாப் சிங் குடிபோதையில் இருந்ததைத் தனது செல்போனில் வீடியோ பதிவுசெய்திருக்கிறார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்த வீடியோவில், ரோஹிதாப் சிங் தொழிலதிபர் தினேஷ் அஹுஜாவுடன் சண்டையிடுகிறார். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பாகக் கேட்டபோது ரோஹிதாப் சிங், ``இப்போது நாம் சண்டையிடலாம், வேண்டுமானால் காவல் நிலையம் செல்வோம்" எனப் பேசியதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து தொழிலதிபர் தினேஷ் கொடுத்த புகாரின்பேரில், போலீஸார் மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ மகன்மீது வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.