Published:Updated:

சென்னை ஐஐடி: பட்டியலின மாணவியிடம் பாலியல் அத்துமீறல்; சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரும் மாதர் சங்கம்

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி-யில் படித்துவரும் மேற்கு வங்க பட்டியலின மாணவி, உடன் பயிலும் மாணவர்கள் மற்றும் பேராசிரியரால் பாலியல் சீண்டலுக்கு ஆளான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

சென்னை ஐஐடி: பட்டியலின மாணவியிடம் பாலியல் அத்துமீறல்; சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரும் மாதர் சங்கம்

சென்னை ஐஐடி-யில் படித்துவரும் மேற்கு வங்க பட்டியலின மாணவி, உடன் பயிலும் மாணவர்கள் மற்றும் பேராசிரியரால் பாலியல் சீண்டலுக்கு ஆளான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Published:Updated:
சென்னை ஐஐடி

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி 2017 முதல் சென்னை ஐஐடி வேதியியல்துறையில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுவருகிறார். இவர் தன்னுடன் பயிலும் சக மாணவர்கள் மூன்று பேரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளார். இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட மாணவி தனது துறைப் பேராசிரியரிடம் புகாரளிக்க, சாதியரீதியாக அந்தப் பெண்ணை இழிவுபடுத்தி இந்தப் பிரச்னையைக் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இதே மாணவர்கள் மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதனால் உளவியல்ரீதியாகக் கடும் மன அழுத்தத்துக்கு ஆளான அந்தப் பெண், 2020-ல் ஐஐடி உள்புகார் கமிட்டியில் அவர்கள்மீது புகார் மனு அளித்தார். அதையடுத்து இந்தப் புகார் மீதான அறிக்கையை ஐஐடி நிர்வாகத்தில் கமிட்டி சமர்ப்பித்திருந்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமலே இருந்திருக்கிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் மூன்று முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்

பட்டியலின மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
பட்டியலின மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
விகடன்

பின்னர் கடந்த ஆண்டு மார்ச்சில், தேசிய மகளிர் ஆணையத்துக்கும், தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பப்பட்டிருந்தும் பெரிய அளவில் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற மாதர் சங்கம் கோரிக்கை
வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற மாதர் சங்கம் கோரிக்கை

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 22-ம் தேதி, தமிழக மாநில மகளிர் ஆணையத் தலைவரிடம் புகாரளித்துள்ளார். இதன் எதிரொலியாக, சென்னை சேப்பாக்கத்திலுள்ள மாதர் சங்க அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் தகுந்த நடவடிக்கை எடுக்காமலிருந்த காவலர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியும், குற்றவாளிகள் அனைவரின் மீதும் SC/ST வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism