Published:Updated:

`தி.மு.க மீது பழி சுமத்தவே என்னிடம் விசாரணை!' - கொதிக்கும் சீனியம்மாள்

செ.சல்மான் பாரிஸ்
ஈ.ஜெ.நந்தகுமார்

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு விசாரணை பற்றி தி.மு.க-வின் சீனியம்மாள் பேசியிருக்கிறார்.

சீனியம்மாள்
சீனியம்மாள்

``கொலை வழக்கை திசை திருப்பவும், தி.மு.க மீது பழி சுமத்துவதற்காகவும்தான் என்னிடம் போலீஸ் விசாரணை நடத்தியது'', என்று, திருநெல்வேலி முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலையான வழக்கில் விசாரிக்கப்பட்ட தி.மு.க பிரமுகர் சீனியம்மாள் தெரிவித்துள்ளார்.

சீனியம்மாள்
சீனியம்மாள்

கடந்த சில நாள்களுக்கு முன், தி.மு.க-வைச்சேர்ந்த திருநெல்வேலி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவர் கணவர், வேலைக்காரப் பெண் ஆகியோர், அடையாளம் தெரியாதவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையின் பின்னணி என்னவென்பது பற்றி தனிப்படையினர் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மதுரை வந்த திருநெல்வேலி போலீஸ், தி.மு.க மாநில ஆதிதிராவிட நலக்குழு துணைச்செயலாளரும் தலைமைக்கழகப் பேச்சாளருமான சீனியம்மாளிடம் விசாரணை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சீனியம்மாள்
சீனியம்மாள்

இந்த நிலையில், தன்னிடம் செய்யப்பட்ட விசாரணை பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்த சீனியம்மாள், ``திருநெல்வேலியைச் சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள், அரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என்னிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள். கொலையுண்ட உமாமகேஸ்வரிக்கு உலகத்தில் எதிரிகளே இல்லை என்கிற அளவுக்கு நல்ல மனம் படைத்தவர். அவர் கொலை செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. எனக்கும் அவருக்கும் எந்த பணப் பரிமாற்றமும் நடைபெறவில்லை. கடந்த 15 மாதங்களாக உடல்நலக்குறைவால் மதுரையில் தங்கியுள்ளேன். எனது போன் உரையாடல்கள் குறித்து விசாரணைசெய்தனர்.

சீனியம்மாள்
சீனியம்மாள்

கொலை வழக்கை திசைதிருப்பி தி.மு.க மீது பழி சுமத்துவதற்கான முயற்சிதான் இந்த விசாரணை என்று நினைக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் சீட்டு கேட்டதாகக் கூறுவது பொய். உடல்நிலை சரியில்லாத நிலையில் எப்படி சீட் கேட்க முடியும்?'' என்றார்.