Published:Updated:

மதுரை: 8 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை! - போக்சோ சட்டத்தில் காவலர் கைது

சிறார் வதை
சிறார் வதை

மதுரை மாவட்டம், அங்காடி மங்கலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், சிலைமான் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிவருகிறார். இவர் 8 வயது சிறுமி ஒருவரை அடிக்கடி அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது அந்தச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

8 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, அவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறார் வதை
சிறார் வதை

குற்றங்களைத் தடுத்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையினரே குற்றங்களில் ஈடுபடும் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றன. மதுரை அருகே சிலைமான் காவல் நிலையக் காவலர் சதீஷ், போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

மதுரை மாவட்டம், அங்காடி மங்கலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், சிலைமான் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிவருகிறார். இவர் 8 வயது சிறுமி ஒருவரை அடிக்கடி அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

குழந்தைகளைப் பாதுகாக்க தொலைபேசி எண்
குழந்தைகளைப் பாதுகாக்க தொலைபேசி எண்

இதைப் பற்றித் தன் தாயாரிடம் சிறுமி தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சிலைமான் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

மயிலாடுதுறை: வீட்டில் இருந்த சிறுமி; சிறார் வதை கொடுமை! - போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது

இதைப் பற்றி தீவிர விசாரணை நடத்திய சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர், புகாரில் உண்மை இருப்பதை உறுதி செய்து காவலர் சதீஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைதுசெய்தார்.

8 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை
8 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை

தங்கள் குழந்தைகள், பாதிக்கப்பட்டால் பெற்றோர்கள் துணிச்சலாக காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும் அல்லது அவசர உதவி எண்ணில் புகார் தெரிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு