Published:Updated:

திருச்சி: பள்ளி மாணவிகள் முன்பு நிர்வாணம்; ஆபாச சைகை - இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது

கைதுசெய்யப்பட்ட ராஜ்குமார்

பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்றதோடு, ஆபாச சைகை காட்டியிருக்கிறார் ராஜ்குமார்.

திருச்சி: பள்ளி மாணவிகள் முன்பு நிர்வாணம்; ஆபாச சைகை - இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது

பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்றதோடு, ஆபாச சைகை காட்டியிருக்கிறார் ராஜ்குமார்.

Published:Updated:
கைதுசெய்யப்பட்ட ராஜ்குமார்

திருச்சி பொன்மலை ரயில்வே காலனி அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. ரயில்வே காலனியின் பாழடைந்த, கைவிடப்பட்ட குடியிருப்புப் பகுதிகளின் வழியே மாணவ, மாணவிகள் இந்தப் பள்ளிக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வழியாக மாணவிகள் சிலர் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் ஆடைகளைக் களைந்தபடி நிர்வாண போஸில் ஆபாச சைகைகளைக் காட்டியிருக்கிறார்.

போலீஸ் சித்திரிப்பு படம்
போலீஸ் சித்திரிப்பு படம்

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அவர்களின் பெற்றோர்களிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கின்றனர். அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பெற்றோர், அந்த மர்ம நபரைப் பிடித்து பொன்மலை காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாரளித்தனர். விசாரணையில் ஆபாச செய்கை செய்த அந்த நபர் இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார் என்பது தெரியவந்திருக்கிறது.

அதையடுத்து ராஜ்குமாரைக் கைதுசெய்த போலீஸார், அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர். இது குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். “இந்து மக்கள் கட்சியில் பொறுப்பில் இருக்கும் ராஜ்குமார், பொன்மலைப்பட்டி கணேசபுரம் பகுதியில் பைக் மெக்கானிக் கடையை நடத்திவருகிறார். ஏற்கெனவே ஒருமுறை ராஜ்குமார் இதேபோல அநாகரிகமான முறையில் நடந்துகொள்ள, எச்சரிக்கை செய்து விட்டிருந்தோம். இந்நிலையில் பள்ளிக் குழந்தைகளிடம் மறுபடியும் சில்மிஷம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், அவர்களுடைய பெற்றோரிடம் புகாரை வாங்கி ராஜ்குமார் மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறோம்” என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism