Election bannerElection banner
Published:Updated:

திருச்சி: `வெளியில் மட்டும் நிக்கச் சொல்லாதீங்க... கொன்னுடுவாங்க' - நீதிமன்றத்தில் ஆஜரானவர் கதறல்

போலீஸாரிடம் கதறிய ராஜேஷ்
போலீஸாரிடம் கதறிய ராஜேஷ்

ராஜேஷ் பலமுறை திருமாறனை அழைத்து எச்சரித்திருக்கிறார். அவர் கட்சிப் பதவிகளைக்கொண்டு மிரட்டியிருக்கிறார். இதனால் அவரது குடும்பம் கொஞ்ச காலம் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டது.

`அ.தி.மு.க பிரமுகரை வெடிகுண்டு வீசிக் கொலை செய்த வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரானவர், போலீஸாரிடம்` ``என்னைத் தயவுசெய்து வெளியில் நிற்கச் சொல்லாதீர்கள். நான் வெளியில் நின்றால் என்னைக் கடத்திச் சென்று கொன்றுவிடுவார்கள்” என்று கெஞ்சிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலைசெய்யப்பட்ட அ.தி.மு.க பிரமுகர் திருமாறன்
கொலைசெய்யப்பட்ட அ.தி.மு.க பிரமுகர் திருமாறன்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரைச் சேர்ந்தவர் திருமாறன். இவர் தே.மு.தி.க-வில் மாவட்ட நிர்வாகியாக இருந்தவர். சமீபகாலமாக அ.தி.மு.க பிரமுகராக வலம்வந்தார். இந்தநிலையில், கடந்த 20 வருடங்களாக மேன்பவர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். தொழிலதிபரான இவர், தனது திருமணநாளான சனிக்கிழமை அன்று மறைமலைநகரிலுள்ள முருகன் கோயிலுக்குக் குடும்பத்தாருடன் வந்திருந்தார். அன்று கோயிலுக்கு வந்த பக்கதர்களுக்குப் பிரசாதம் வழங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு பைக்கில் வந்த ஐந்து போ்கொண்ட கும்பல் திருமாறன் மீது வெடிகுண்டை வீசித் தாக்குதல் நடத்தியது. அதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தநிலையில், தப்பி ஓடிய கொலையாளிகளை நோக்கி அவருக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஆறு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். இதில் திருவள்ளூரை அடுத்த ஆத்தூர் கிராமத்தைச்சேர்ந்த சுரேஷ் என்பவர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நீதிமன்றத்தில் ஆஜரான ராஜேஷ்
நீதிமன்றத்தில் ஆஜரான ராஜேஷ்

மற்ற மூவரும் தப்பி ஓடிவிட்டனா். முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நிகழ்ந்திருப்பதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள். குண்டு வெடித்ததில் அங்கிருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓட, அந்தக் கோயிலே அல்லோலகல்லோலப்பட்டது. திருமாறன் கார் டிரைவர் சுரேஷ் மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மறைமலைநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்த நிலையில் முக்கியக் குற்றவாளியான ராஜேஷ் என்பவர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அங்குதான் அவர் போலீஸாரிடம் கதறியிருக்கிறார்.

என்ன நடந்தது என்று வழக்கை விசாரித்துவரும் போலீஸார் தரப்பில் விசாரித்தோம். ``திருமாறன், ராஜேஷ் இருவரும் நண்பர்கள். இருவருமே இணைந்து தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் கன்சல்டன்ஸி வேலை செய்துவந்தனர். அதில், நல்ல வருமானம் கிடைத்திருக்கிறது. பின்னர் இந்தத் தொழிலைத் தனியாகச் செய்தால் என்ன என்று ராஜேஷைக் கழற்றிவிட்டுவிட்டுத் தனியாகத் தொழிலைச் செய்ய ஆரம்பித்தார் திருமாறன். தொடர்ந்து, ராஜேஷுக்கு எதிராகப் பல வேலைகளும் செய்யத் தொடங்கினார்.

போலீஸாரிடம் கதறிய ராஜேஷ்
போலீஸாரிடம் கதறிய ராஜேஷ்

இதைத் தெரிந்துகொண்ட ராஜேஷ் பலமுறை திருமாறனை அழைத்து எச்சரித்திருக்கிறார். அவர் கட்சிப் பதவிகளைக் கொண்டு மிரட்டியிருக்கிறார். இதனால் அவரது குடும்பம் கொஞ்ச காலம் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டது. அவரது அட்ராசிட்டிகளைத் தாங்கிக்கொள்ள முடியாத ராஜேஷ், அவரை ஐந்து முறை கொலை செய்யத் திட்டமிட்டார். அது நடக்கவில்லை. ஆறாவது முறையாகத்தான் கூலிப்படைகளைக் கொண்டு பொட்ரோல் குண்டு வீசி கொலை செய்திருக்கிறார்.

ராஜேஷ்
ராஜேஷ்

நேற்று (26ம) காலையிலேயே நீதிமன்றத்துக்குள் வந்தவர், `தயவு செய்து என்னை நீதிமன்றத்தைவிட்டு வெளியில் நிற்கச் சொல்லாதீர்கள். நான் வெளியில் நின்றால் என்னைக் கடத்திச் சென்று கொன்றுவிடுவார்கள்’ என்றவர் நீதிபதியின் கண்முன்னே உக்கார்ந்துகொண்டார். அவரை எதிர்த் தரப்பினர் கொன்றுவிடுவார்கள் என்ற பயம் அவருக்கு இருக்கிறது” என்றனர் போலீஸ் தரப்பில்.

இந்தக் கொலை வழக்கில் இன்று மேலும் ஆறு பேர் சரணடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு