Published:Updated:

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ்அப்பில் கருத்து; உதய்பூரைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஒருவர் கொலை?

உமேஷ்

பாஜக பிரமுகர் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக வாட்ஸ்அப்பில் பதிவிட்ட நபர் மகாராஷ்டிராவில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. நடந்தது என்ன?

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ்அப்பில் கருத்து; உதய்பூரைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஒருவர் கொலை?

பாஜக பிரமுகர் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக வாட்ஸ்அப்பில் பதிவிட்ட நபர் மகாராஷ்டிராவில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. நடந்தது என்ன?

Published:Updated:
உமேஷ்

பாஜக பிரமுகர் நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்துத் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்ட டெய்லர் ஒருவர் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தின் தாக்கம் அடங்கும் முன்பு மகாராஷ்டிராவிலும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம், அமராவதியைச் சேர்ந்தவர் உமேஷ் (54). கால்நடைகளுக்கான மருத்துக் கடை நடத்திவந்தார். உமேஷ் தனது கடையை அடைத்துவிட்டு இரவு 10 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். பின்னால் வந்த மற்றொரு வண்டியில் அவரின் மகன் வந்துகொண்டிருந்தார். வழியில் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் உமேஷ் வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். அதில் ஒருவன் உமேஷ் கழுத்தில் வெட்டிவிட, அவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

நுபுர் ஷர்மா
நுபுர் ஷர்மா

உமேஷை அவரின் மனைவியும் மகனும் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து கொலையாளிகள் முடாஷிர் அகமத், ஷாருக் பதான், அப்துல் தவுபிக், சோயப் கான், அதிப் ரஷித் ஆகியோரைக் கைதுசெய்தனர். மேலும் ஒருவரைத் தேடிவருகின்றனர்.

கைதான அனைவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். போலீஸாரின் விசாரணையில் உமேஷ், பாஜக பிரமுகர் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக வாட்ஸ்அப் குரூப்பில் ஒரு கருத்தைப் பதிவிட்டிருக்கிறார் என்று தெரியவந்தது. அதில் தவறுதலாக இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் ஒரு குரூப்பிலும் இதைப் பதிவிட்டுவிட்டது தெரியவந்திருக்கிறது. கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவனிடம் நடத்திய விசாரணையில் `முகமது நபியை அவமதித்தவர்கள் சாக வேண்டும்’ என்று தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து உமேஷ் மகன் சங்கேத் கூறுகையில், ``என் தந்தையின் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வுசெய்தபோது ஆட்சேபகரமான கருத்துகள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!