Published:Updated:

`உனது மகனைக் கண்டித்து வை..!’ - மகளின் காதல் விவகாரம்... காதலனின் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்

காதல் கொலை
காதல் கொலை

ஆகாஷ், தர்ஷினி இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்திருக்கிறார்கள். இதைத் தெரிந்துகொண்ட தர்ஷினியின் தந்தை செல்வக்குமார், ஆகாஷின் தந்தையிடம் அவர் மகனைக் கண்டித்துவைக்கும்படி சொல்லியிருக்கிறார்.

திருச்சி மாவட்டம், லால்குடியில் தனது மகளைக் காதலிக்கும் காதலனின் தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்து தப்பியோடிய காதலியின் தந்தை உள்ளிட்ட இருவரை லால்குடி போலீஸார் தேடிவருகின்றனர்.

திருச்சி போலீஸார்
திருச்சி போலீஸார்

லால்குடி பேரூராட்சிப் பகுதியிலுள்ள சுண்ணாம்புகாரத் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன். தனியார் கார் டிரைவரான பார்த்திபனுக்கு ஆகாஷ் என்ற 20 வயது மகன் இருக்கிறார். அதே பகுதியிலுள்ள வளையல்காரத் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் டிரைவாக பணியாற்றிவருகிறார். இவரின் மகள் தர்ஷினி திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் படித்துவருகிறார்.

ஆகாஷ் , தர்ஷினியைக் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்திருக்கிறார். தன் மகளிடம் பேசுவதை ஆகாஷ் நிறுத்த வேண்டும் என தர்ஷினியின் தந்தை செல்வக்குமார், ஆகாஷையும் அவரது தந்தையையும் கண்டித்திருக்கிறார். ஆனால் தர்ஷினியிடம் பேசுவதை ஆகாஷ் நிறுத்தவில்லை. இதை தந்தை பார்த்திபன் கண்டிக்கவும் இல்லை என ஆத்திரமடைந்தார் செல்வக்குமார்.

காதல் பிரச்னையில் தந்தைக் கொலை
காதல் பிரச்னையில் தந்தைக் கொலை

இந்நிலையில் இன்று காலை செல்வக்குமார் தனது நண்பர் ஆட்டோ ஓட்டுநர் பாம்புநாகராஜுடன் லால்குடி கொடிக்காத்தெருவிலுள்ள மாரியம்மன்கோயில் பகுதியில் சென்றுகொண்டிருந்த பார்த்திபனை வழிமறித்து கத்தியால் குத்த முயன்றிருக்கிறனர். தப்பியோடிய பார்த்திபனைப் பின்தொடர்ந்து, விரட்டிச் சென்று கழுத்து மற்றும் வயிற்றில் குத்திவிட்டு இருவரும் தப்பியோடிவிட்டனர். பார்த்திபனை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். தப்பியோடிய இருவரையும் லால்குடி போலீஸார் தேடிவருகின்றனர். லால்குடி மருத்துவமனையில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டதால், அசம்பாவிதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

இது குறித்து வழக்கை விசாரித்துவரும் காவலர்களிடம் பேசினோம். ``ஆகாஷ், தர்ஷினி இருவரும் கடந்த ஒரு வருடமாகக் காதலித்து வந்திருக்கிறார்கள். இதைத் தெரிந்துகொண்ட தர்ஷினியின் தந்தை செல்வக்குமார், ஆகாஷின் தந்தையிடம் மகனைக் கண்டித்துவைக்கும்படி சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் கண்டித்ததாகத் தெரியவில்லை.

பிரச்னையில் ஈடுபடும் உறவினர்கள்
பிரச்னையில் ஈடுபடும் உறவினர்கள்
திருச்சி: `ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்...  ஃபேஸ்புக் காதலி அனுப்பிய ஆபாசப் படம்!'-வாலிபருக்கு நடந்த சோகம்

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் ஆகாஷ், தர்ஷினிக்கு போன் செய்து பேசியிருக்கிறார். இந்த விவகாரம் தெரிந்ததும், செல்வக்குமார் மீண்டும் பார்த்திபனைச் சந்திக்கச் சென்றிருக்கிறார். அங்கு இருவருக்கும் பேச்சு முற்றிப்போக, இவர் கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார். இப்போதுதான் விசாரணையை தொடங்கியிருக்கிறோம். பிறகு பேசுங்கள்'' என்று முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு