Published:Updated:

நெல்லை: உடலில் கல்லைக் கட்டி ஆற்றில் வீசிக் கொலைசெய்யபட்ட நபர்! - திருமணம் மீறிய உறவு காரணமா?!

கொலைசெய்யப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுபவர், மனைவியைப் பிரிந்து வாழும் நிலையில் அவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்திருக்கிறது. திருமணம் மீறிய உறவு தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

நெல்லை: உடலில் கல்லைக் கட்டி ஆற்றில் வீசிக் கொலைசெய்யபட்ட நபர்! - திருமணம் மீறிய உறவு காரணமா?!

கொலைசெய்யப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுபவர், மனைவியைப் பிரிந்து வாழும் நிலையில் அவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்திருக்கிறது. திருமணம் மீறிய உறவு தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

Published:Updated:

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் செல்வதற்கான பணிகள் நடந்துவருகின்றன. அதனால் அந்தக் கால்வாயில் மழைநீர் தேங்கிக்கிடக்கிறது. அதில் ஆண் ஒருவரின் உடல் மிதந்தபடி கிடப்பதை அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

முன்னீர்பள்ளம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது 35 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடல் கிடந்துள்ளது. அவரின் உடலில் துண்டு மூலம் கற்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும் ஓரிரு நாள் ஆனதால் உடல் மிதந்து வெளியே வந்திருக்கிறது. உடலைக் கைப்பற்றிய போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடக்கத்தில், அந்த வழியாகச் சென்ற யாராவது நீச்சல் தெரியாமலோ அல்லது கால்வாயில் தவறி விழுந்தோ உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கியபோதிலும், சாதாரணமானவர்கள் அந்தக் காட்டுப் பகுதிக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை என்பதால் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்திலும் விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்தப் பகுதியில் கிடைத்த செல்போன் உதவியுடனும் விசாரணை விரிவடைந்தது.

முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகேயுள்ள அக்கமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமாராக இருக்கலாம் என்பது தெரியவந்தது. பா.ஜ.க-வில் முக்கியப் பொறுப்பு வகித்த அவர், கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவந்திருக்கிறார். அதற்காக நெல்லை வந்த அவரை யாரேனும் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவல்துறை விசாரணையில் செந்தில்குமார், மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவருவது தெரியவந்தது. அத்துடன் அவருக்கு கரூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு இருப்பதும், அவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடந்ததும் தெரியவந்தது. சமீபத்தில் அந்தப் பெண், செந்தில்குமாரை ஆபாசமாகத் திட்டிய ஆடியோவும் போலீஸாருக்குக் கிடைத்தது.

கொலை நடந்த கால்வாய்
கொலை நடந்த கால்வாய்

நெல்லையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடனும் செந்தில்குமாருக்கு தொடர்பு இருந்ததாகவும் போலீஸார் தெரிவிக்கிறார்கள். அதனால் திருமணம் மீறிய உறவு காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது. இருப்பினும், இறந்தது செந்தில்குமார்தானா என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவரின் மனைவியும் சகோதரரும் நெல்லைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் உறுதிப்படுத்திய பின்னரே அடுத்தகட்ட விசாரணை நடக்கும் என்றும், கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism