Published:Updated:

பாலியல் புகாரளித்தவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல்; பா.ஜ.க பிரமுகரின் மகன்கள் வெறிச்செயல்!

கொலை ( representational image )

மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் அளித்த பெற்றோரைக் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் புகாரளித்தவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல்; பா.ஜ.க பிரமுகரின் மகன்கள் வெறிச்செயல்!

மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் அளித்த பெற்றோரைக் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
கொலை ( representational image )

இந்தச் சம்பவம் தொடர்பாக, பாலியல் குற்றச்சாட்டில் சிறையிலிருக்கும் பா.ஜ.க பிரமுகரின் இர்ண்டு மகன்கள் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் கைதுசெய்திருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே கோழிக்குத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 60). பா.ஜ.க. பிரமுகரான இவர் ஒரே குடும்பத்தைச்  சேர்ந்த 11 மற்றும் 7 வயது சிறுமிகள் உட்பட ஏழு சிறுமிகளிடம் தனது செல்போனிலுள்ள ஆபாசப் படங்களைக் காண்பித்து பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஒரு சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கடந்த 11 -ம் தேதி பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம் 2012, மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மகாலிங்கத்தின் மீது வழக்கு பதிவு செய்து அவரைச் சிறையிலடைத்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஏழு சிறுமிகளும் நேற்று (15.07.2021) வாக்குமூலம் அளித்தனர். சிறுமிகளின் பெற்றோர்களில் ஒருவரான பாண்டியராஜ் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, சிறையிலடைக்கப்பட்டுள்ள பா.ஜ.க பிரமுகர் மகாலிங்கத்தின் மகன்களான ஜவகர், சுதாகர் மற்றும் சிலர் ஒன்று சேர்ந்து வழிமறித்து கத்தி  மற்றும் கம்பால் தாக்கியுள்ளனர்.

பாண்டியராஜ் சத்யராஜ்
பாண்டியராஜ் சத்யராஜ்

தடுக்க வந்த பாண்டியராஜ் என்பவரையும், இன்னொரு சிறுமியின் தந்தை சத்தியராஜையும்  கத்தியால் குத்தினர்.  இதைக் கண்டு ஊர் மக்கள் திரண்டதும் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தப்பியோடிவிட்டனர். காயம்பட்ட இருவரையும் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.  இந்தச் சம்பவம் தொடர்பாக ஜவகர் சுதாகர் உள்ளிட்ட நான்கு பேரைக் கைதுசெய்து குத்தாலம் போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.