Published:Updated:

செய்யாத பணிக்கு பில்... ஊராட்சி துணைத் தலைவர் நெருக்கடி ; தற்கொலைக்கு முயன்ற தலைவர் - நடந்தது என்ன?

ரேணுகா தேவி

``துணைத் தலைவர் நாகராஜ் எப்போது என்னிடம் மோதல் போக்கையே கடைப்பிடித்துவருகிறார். ஊராட்சியிலுள்ள குடிநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யாமலேயே பில் போட்டு, பணம் தருமாறு தொந்தரவு செய்துவந்தார்." - ரேணுகா தேவி

செய்யாத பணிக்கு பில்... ஊராட்சி துணைத் தலைவர் நெருக்கடி ; தற்கொலைக்கு முயன்ற தலைவர் - நடந்தது என்ன?

``துணைத் தலைவர் நாகராஜ் எப்போது என்னிடம் மோதல் போக்கையே கடைப்பிடித்துவருகிறார். ஊராட்சியிலுள்ள குடிநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யாமலேயே பில் போட்டு, பணம் தருமாறு தொந்தரவு செய்துவந்தார்." - ரேணுகா தேவி

Published:Updated:
ரேணுகா தேவி

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலூர் ஊராட்சி மன்றத்தின் தலைவராகப் பதவி வகித்துவரும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த ரேணுகா தேவி திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ரேணுகா தேவியை மீட்டு ஊட்டியிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

தற்கொலை
தற்கொலை

மேலூர் ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் தி.மு.க-வைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தலைவர் ரேணுகா தேவிக்கு அலுவலகரீதியாக நெருக்கடி கொடுத்த காரணத்தாலேயே தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரேணுகா தேவி இது குறித்துப் பேசுகையில், "துணைத் தலைவர் நாகராஜ் எப்போதும் என்னிடம் மோதல் போக்கையே கடைப்பிடித்துவருகிறார். ஊராட்சியிலுள்ள குடிநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யாமலேயே பில் போட்டு பணம் தருமாறு தொந்தரவு செய்துவந்தார். இது எனக்கு அளவுக்கு அதிகமான மனஉளைச்சலை ஏற்படுத்தியது. நெருக்கடி தாங்க முடியாமல் தற்கொலை முடிவை எடுத்தேன்" என்றார்.

ரேணுகா தேவி
ரேணுகா தேவி

இந்த விவகாரம் குறித்து துணைத் தலைவர் நாகராஜ் கூறுகையில், "ஊராட்சி தலைவருக்கு நாங்கள் எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை. 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக ஊராட்சி நிதியில் தலைவர் ரேணுகாதேவி முறைகேடு செய்திருக்கிறார். அதை ஆதாரபூர்வமாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றிருக்கிறோம். இதை கலெக்டரிடம் தெரிவித்து, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம். முறைகேட்டில் ஈடுபட்டதை திசைதிருப்பவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறார்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism