Published:Updated:

தன் மகளிடம் பேசியதால் சந்தேகம்... 14 வயது சிறுவனை கொலை செய்த தந்தை, மகன் கைது!

உதான் நிஷாத், இவரின் மகன் அமன் மற்றும் இவர்களின் கூட்டாளிகள் சேர்ந்து சிறுவனைக் கடத்திச்சென்று கிராமத்துக்கு வெளியே அடித்துக்கொன்று, உடலை செங்கற்களுடன் கட்டி குளத்தில் வீசினர்.

தன் மகளிடம் பேசியதால் சந்தேகம்... 14 வயது சிறுவனை கொலை செய்த தந்தை, மகன் கைது!

உதான் நிஷாத், இவரின் மகன் அமன் மற்றும் இவர்களின் கூட்டாளிகள் சேர்ந்து சிறுவனைக் கடத்திச்சென்று கிராமத்துக்கு வெளியே அடித்துக்கொன்று, உடலை செங்கற்களுடன் கட்டி குளத்தில் வீசினர்.

Published:Updated:

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தந்தை ஒருவர், தன்னுடைய மகளிடம் பேசியதற்காக 14 வயது சிறுவனைக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த சம்பவத்தில், கொலைசெய்த தந்தையின் மகனும் ஈடுபட்டிருக்கிறார்.

கொலை
கொலை

குவால்டோலி காவல் நிலையத்துக்குட்பட்ட ராம்பூர் லுத்வாகேடா கிராமத்தில் கடந்த புதன்கிழமை இரவன்று நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில், கொலை செய்தவர் உதான் நிஷாத் மற்றும் அவரின் மகன் அமன் என்று தெரியவந்திருக்கிறது. பின்னர் இதுகுறித்து, கொலைசெய்யப்பட்ட சிறுவனின் தந்தை பப்லு நிஷாத், குவால்டோலி காவல் நிலையத்தில் உதான் நிஷாத், அமன் மற்றும் இவர்களின் கூட்டாளிகள் மீது புகாரளித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து போலீஸாரும், கடத்தல் மற்றும் கொலைக்கான இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, தேடுதலில் ஈடுபட்டனர்.

கைது
கைது

இந்த சம்பவம் குறித்து பேசிய ஏ.சி.பி அமர்நாத், ``ராம்பூர் லுத்வாகேடா கிராமத்தில் வசித்துவரும் விவசாயி பப்லு நிஷாத்தின் 14 வயது மகன் தான் கொலைசெய்யப்பட்ட சிறுவன். இவர்களுக்குப் பக்கத்து ஊரில் வசிக்கும் உதான் நிஷாத், 7-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தன்னுடைய மகளுடன் பல சந்தர்ப்பங்களில் பேசுவதைப் பார்த்து சந்தேகமடைந்திருக்கிறார். இதனால், உதான் நிஷாத், மகன் அமன் மற்றும் இவர்களின் கூட்டாளிகள் சேர்ந்து சிறுவனை கடத்திச்சென்று கிராமத்துக்கு வெளியே அடித்துக்கொன்றிருக்கின்றனர். பின்னர் உடலை செங்கற்களுடன் கட்டி குளத்தில் வீசினர்" என்று கூறினார். மேலும்,  உதான் நிஷாத் கைது செய்யப்பட்ட பிறகு, உடலை குளத்தில் எங்கு வீசினேன் என்பதை அவர் கூறினார் என்பதையும் போலீஸ் தெரிவித்திருக்கிறது.