Published:Updated:

தெலங்கானா: கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி; பின்னணியில் அரசியல் புள்ளிகளா?

கூட்டுப் பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி ஒருவர் ஓடும் காரில் வைத்து 5 சிறுவர்கள் உட்பட 6 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலங்கானா: கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி; பின்னணியில் அரசியல் புள்ளிகளா?

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி ஒருவர் ஓடும் காரில் வைத்து 5 சிறுவர்கள் உட்பட 6 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கூட்டுப் பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி ஒருவர் 5 சிறுவர்கள் உட்பட 6 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தில் எம்.எல்.ஏ மகன் உட்பட மாநிலத்தை ஆளும் அரசியல் புள்ளிகளின் வாரிகளும் ஈடுபட்டிருப்பது தெலங்கானா மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலங்கானா, ஹைதராபாத்
தெலங்கானா, ஹைதராபாத்

கடந்த மே 28-ம் தேதி, ஹைதராபாத்தின் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் இணைந்து, தங்கள் வகுப்பில் படிக்கும் சக மாணவரின் பிறந்தநாள் விழாவை அதே பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பப் ஒன்றில் கொண்டாட ஏற்பாடு செய்தனர். உஸ்மான் அலி கான் என்பவர் பப்-க்கு முன்பதிவு செய்ய, சம்மந்தப்பட்ட மாணவியும் ரூ.1,300 செலுத்தி தன் நண்பர்களுடன் விழாவில் கலந்துகொண்டிருக்கிறார். பகலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலை 4 மணிபோல் அந்த சிறுமி பப்பை விட்டு வெளியேறியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது, பப்பிற்கு வெளியே பென்ஸ் காரில் காத்திருந்த சிறுவர்கள், அந்த சிறுமியை அழைத்து, தாங்களே காரில் பத்திரமாக வீடுவரை கொண்டு விட்டுவிடுவதாகக் கூறியிருக்கின்றனர். அதற்கு சம்மதம் தெரிவித்த சிறுமி, சிறுவர்களின் பேச்சை நம்பி காரில் ஏறியிருக்கிறார். ஆனால் சிறுவர்கள், சிறுமியின் வீட்டிற்குச் செல்லாமல் பஞ்சாரா ஹில்ஸ் அருகே உள்ள பேக்கரிக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு சிறுமியை பென்ஸ் காரிலிருந்து இன்னோவா காருக்கு மாற்றியிருக்கின்றனர். அதன் பிறகு, அந்த சிறுவர்கள் ஓடும் காரிலேயே வைத்து மாறிமாறி சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். பின்னர், சிறுமியின் நிலை மோசமடையவும் உடனடியாக வீட்டில் இறக்கி விட்டுச்சென்றிருக்கின்றனர்.

பப்
பப்
மாதிரிப் படம்

பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி தன் பெற்றோரிடம் கூறாமல் வீட்டுக்குள்ளாகவே இருந்திருக்கிறார். ஆனால், சிறுமியின் நடத்தையில் மாற்றம் தெரியவே, விசாரித்த பெற்றோர் தங்கள் மகளின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு சிறுமி நடந்தவற்றை தன் பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார். அதையடுத்து சிறுமியின் தந்தை, கடந்த மே 31-ம் தேதி ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.

தமிழிசை சௌந்தரராஜன் - சந்திரசேகர ராவ்
தமிழிசை சௌந்தரராஜன் - சந்திரசேகர ராவ்

இந்த புகாரைப் பெற்ற காவல்துறை அதிகாரிகள், சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவான சிறுவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, ஜூன் 4-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த தெலங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ரகுநந்தன் ராவ், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் சிசிடிவி வீடியோவையும், புகைப்படங்களையும் வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதையடுத்து சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 நாள்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தலைமைச் செயலாளருக்கும், டி.ஜி.பி-க்கும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடியாக உத்தரவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதைத் தொடர்ந்து காவல்துறையின் தீவிரத் தேடுதல் வேட்டையில், 18 வயது நிரம்பிய சதுதீன் மாலிக் மற்றும் ஐந்து சிறுவர்கள் உட்பட 6 பேர் அடுத்தடுத்து பிடிபட்டனர். அவர்களைக் கைதுசெய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள், 5 பேரின்மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கடத்தல், வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். பண்ணை வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்த வழக்கு தொடர்பாகப் பேசிய ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த், ``குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன. இந்த 6 பேரில் சதுதீன் மாலிக் என்பவர் 18 வயது நிரம்பியவர். மற்றவர்களுக்கு மைனர் வயது. இதில் சதுதீன் மாலிக் உட்பட ஐந்து குற்றவாளிகள் மட்டுமே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஐந்தாவது மைனர் பாலியல் மீறல் நடக்கும் முன்பாக, காரிலிருந்து இறங்கி சென்றுவிட்டார்; மீதமுள்ள 5 பேரின்மீதும் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது; அவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

பா.ஜ.க
பா.ஜ.க

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சிறுவர்களில் ஒருவன், அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வின் மகன் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும், இரண்டு சிறுவர்கள் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த பிரபலங்களின் மகன்கள் என்ற தகவலும் வெளியில் கசிந்திருக்கிறது. இதையடுத்து, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனக்கூறி தெலங்கானா மாநில பா.ஜ.க பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி, ஆளும் சந்திரசேகரராவ் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism