Published:Updated:

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மேலும் 3 பெண்கள் புகார்; சூடுபிடிக்கும் விசாரணை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் மூன்று பெண்கள் புகார் அளித்துள்ளதால், சி.பி.ஐ விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் ஆகிய ஐந்து பேர் கடந்த 2019-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
சிக்கிய ஆளுங்கட்சிப் பிரமுகர்கள்... சூடுபிடிக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு...

சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ என்று வழக்கு விசாரணை விரிவடைந்துகொண்டே சென்றது. சி.பி.ஐ விசாரணைக்குப் பிறகு வழக்கில் சற்றே வேகம் காட்டத் தொடங்கினர். ஆனால், இதிலுள்ள அரசியல் தொடர்பு வெளிவராமல் இருந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹேரன் பால், பாபு ஆகிய மூன்று பேர் கடந்த ஜனவரி மாதம் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து, அருளானந்தம் ஜாமீன் கேட்டு கோவை மகளிர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

 அருளானந்தம்
அருளானந்தம்

அப்போது, ``பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக மேலும் சில பெண்கள் புகார் அளித்துள்ளனர். எனவே, அருளானந்தத்துக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களை அழித்துவிடுவார்” என சி.பி.ஐ தரப்பில் வாதாடியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை இந்த வழக்கில் ஐந்து பேர் மட்டுமே புகார் அளித்திருந்தனர். இந்தநிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மேலும் மூன்று பெண்கள் பேர் புகார் கொடுத்துள்ளனர். இதனால், புகார் கொடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

இதன் காரமணாக சி.பி.ஐ தனது விசாரணையைத் துரிதப்படுத்திவருகிறது. விரைவில், மேலும் சிலர் கைதுசெய்யப்படவும் வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு