Published:Updated:

தெகிடி பட பாணியில் 50 லட்சம் இன்ஷூரன்ஸ் பணத்துக்கு கொலை; 1 வருடத்துக்குப் பிறகு கண்டுபிடித்த போலீஸ்

க்ரைம்
News
க்ரைம்

காப்பீட்டு பணத்துக்காக கொலை நடைபெறுவது என்பது புதிது அல்ல. 1984-ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த சுகுமாரன் குரூப் என்பவர் இதே போன்று 8 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகைக்காகக் கொலை செய்த வழக்கு மிகவும் பிரபலம் ஆகும்.

தெகிடி பட பாணியில் 50 லட்சம் இன்ஷூரன்ஸ் பணத்துக்கு கொலை; 1 வருடத்துக்குப் பிறகு கண்டுபிடித்த போலீஸ்

காப்பீட்டு பணத்துக்காக கொலை நடைபெறுவது என்பது புதிது அல்ல. 1984-ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த சுகுமாரன் குரூப் என்பவர் இதே போன்று 8 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகைக்காகக் கொலை செய்த வழக்கு மிகவும் பிரபலம் ஆகும்.

Published:Updated:
க்ரைம்
News
க்ரைம்

கோடியில் இன்ஷூரன்ஸ் எடுத்தவர்களுக்கு, பெற்றோர், உறவினர் இல்லையெனில் அவர்களைக் கொலை செய்துவிட்டு அப்பணத்தைக் களவாடும் கதைக் களத்தோடு `தெகிடி’ திரைக்கதை அமைந்திருக்கும். அதேபாணியில், இன்ஷூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்காக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, ஒரு வருடத்துக்குப் பிறகு காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.  

Money
Money

தெலங்கானா ஃபரூக்நகர் மண்டலத்தில் 37 வயதான பிக்ஷபதி என்பவர் கார் மோதியதில் 2021-ல் இறக்கிறார். முதலில் விபத்து எனத் தெரிவிக்கப்பட்ட இவ்வழக்கில் விசாரணை மேற்கொள்ளப் படுகிறது. பல மாத விசாரணைக்குப் பிறகு 50 லட்ச ரூபாய் காப்பீட்டுத் தொகைக்காக நான்கு பேர் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. குற்றத்தில் ஈடுபட்ட ஸ்ரீகாந்த், சதீஷ் மற்றும் சம்மன்னா ஆகிய மூவரையும், மோதிலால் என்ற காவலாளியையும் ஷாட்நகர் போலீஸார் கைது செய்தனர்.

பிக்ஷபதி, சதீஷ் மற்றும் சம்மன்னா ஆகியோர் ஸ்ரீகாந்த்துக்கு கீழ் வேலை செய்து வந்துள்ளனர். ஸ்ரீகாந்த் ஒரு மோசடி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அந்த நிறுவனத்தில் ஊழியர்களின் கிரெடிட் கார்டு, ஆதார் கார்டுகளை வைத்து லோனுக்கு விண்ணப்பித்து, பணம் பெறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

2020 அக்டோபர் பிக்ஷபதி நிறுவனத்தில் சேர்ந்த சில நாள்களுக்குப் பிறகு, அவரது பெயரில் ஸ்ரீகாந்த் 50 லட்சம் ரூபாய் இன்ஷூரன்ஸ் திட்டத்தை எடுத்து, தன்னை நாமினியாகக் குறிப்பிட்டுள்ளார்.

வீடு
வீடு

2021 பிப்ரவரியில், ஸ்ரீகாந்த் தன்னுடைய ஆவணங்களைப் பயன் படுத்தி பிக்ஷபதியின் பெயரில் கடனுக்கு விண்ணப்பித்து, மேட்சல் - மல்கஜ்கிரி மாவட்டத்தில் தனக்கென ஒரு வீட்டை வாங்கியுள்ளார். இந்தக் காலகட்டத்தில் பிக்ஷபதிக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லை என்பதை ஸ்ரீகாந்த் அறிந்து கொண்டு, மற்ற மூவரோடு சேர்ந்து 50 லட்சம் ரூபாய் இன்ஷூரன்ஸ் பணத்தைப் பெறுவது குறித்து திட்டம் தீட்ட தொடங்கினார்.

பிக்ஷபதியை நன்றாக மது அருந்தச் செய்து காரில் அழைத்து சென்றவர்கள், சிறுநீர் கழிக்க வண்டியை விட்டு பிக்ஷபதி இறங்குகையில், ஹாக்கி ஸ்டிக்கால் அவரின் தலையில் அடித்துவிட்டு, அவர் மீது காரை ஏற்றி உள்ளனர். பார்ப்பதற்கு இது ஒரு கார் விபத்து போல செட் அப் செய்து, அடையாளத்துக்கு அவரது பான் கார்டை விட்டுச் சென்றுள்ளனர்.  

இச்சம்பவம் குறித்து ஷம்ஷாபாத் காவல்துறை துணை ஆணையர் ஆர் ஜெகதீஷ்வர் ரெட்டி செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், ``பிக்ஷபதி 50 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டு பாலிசி வைத்திருப்பதாகவும், அவர் ஒரு வீட்டையும் காப்பீடு செய்திருப்பதாகவும் காப்பீட்டு நிறுவனங்கள் எங்களுக்குத் தெரிவித்தன. இந்த இரண்டு காப்பீட்டுப் படிவங்களிலும்  ஸ்ரீகாந்த் பரிந்துரைக்கப்பட்டவராகவும், இவரின் இறப்புக்குப் பின் அவர் காப்பீட்டுத் தொகையைப் பெற முயற்சி செய்வதாகவும் காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

கைது
கைது
மாதிரிப்படம்

இதோடு குற்றவாளிகளின் தொலைபேசி அழைப்புகளை வைத்து தீவிர கண்காணிப்புக்குப் பிறகு குற்றவாளிகள் பிடிக்கப்பட்டனர். இன்ஷூரன்ஸ் பணம் கிடைக்கையில், ஸ்ரீகாந்த்துக்கு 30 லட்சம் ரூபாயும், மோதிலாலுக்கு 10 லட்சம் ரூபாயும், மத்த 2 ஊழியர்கள் 5 லட்சம் வீதம் பெறத் திட்டமிட்டதாகக் குற்றவாளிகள் ஒப்புக் கொண்டனர். குற்றவாளிகள் நால்வரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலைக் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார். 

காப்பீட்டு பணத்துக்காக கொலை நடைபெறுவது என்பது புதிது அல்ல. 1984-ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த சுகுமாரன் குரூப் என்பவர் இதே போன்று 8 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகைக்காக கொலை செய்த வழக்கு மிக பிரபலம் ஆகும். இந்த வழக்கின் கதையை மாதிரியாக வைத்து சென்ற ஆண்டு மலையாளத்தில் குரூப் என்ற திரைப்படம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி அடைந்துள்ளது.

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் மனிதர்களின் பேராசை காரணமாக இது போன்ற கொலைகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. அதுபோன்ற இந்த வழக்கில் போலீஸார் விரைவாக செயல்பட்டு கொலை நடந்த ஒரு ஆண்டுக்குப் பிறகு இந்த வழக்கின் உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்தது உண்மையிலேயே பாராட்டுக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.