Published:Updated:

``தற்கொலை பண்ற வயசா; அந்தப் பிஞ்சுகளுக்கு என்ன தெரியும்?"- வாளையார் சிறுமிகள் வழக்கில் தாய் வேதனை

இந்த இரண்டு குழந்தைகளை கொலை செய்வதால் உங்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது. குற்றம் செய்தவர்களைக் காப்பாற்றத் துடிக்கும் அனைவரிடமும் நான் கேட்கும் கேள்வி இதுதான்.

Representation Image
Representation Image

வாளையார் சகோதரிகளின் மரணம் 2017-ம் ஆண்டு கேரளாவையே உலுக்கியது. ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். இரண்டாவது சிறுமியின் மரணத்தின் போதுதான் அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். கேரள மாநிலம் வாளையார் அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த தம்பதி ஷாஜி, பாக்கியம். இவர்களுக்கு இரண்டு மகள்கள். இந்தத் தம்பதியின் மூத்த மகள் 13 வயதுச் சிறுமி 2017-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதியன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் இருந்து சிலர் முகமூடி அணிந்து சென்றதாக சிறுமியின் தங்கை போலீஸில் கூறினார். போலீஸார் இந்த விவகாரத்தை அலட்சியமாகக் கையாண்டு வந்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இது நடந்து இரண்டு மாதத்துக்குள் அதாவது 2017, மார்ச் 4-ம் தேதி மற்றொரு சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீடகப்பட்டார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சிறுமிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமிகள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

சிறுமியின் பெற்றோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமிகளிடம் தங்களது உறவினர் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாகவும் அவரை கண்டித்ததாகவும் கூறியுள்ளார். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒரு மைனர் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி பிரதீப் குமார் என்பவர் செப்டம்பர் 30-ம் தேதி விடுவிக்கப்பட்டார். ம.மது, வி.மது மற்றும் ஷிபூ ஆகிய மூவரும் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர்.

தீர்ப்பு
தீர்ப்பு

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இடதுசாரிகள் என்பதால் விடுவிக்கப்பட்டனர் எனச் சிறுமிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக ஆங்கில ஊடகத்திடம் சிறுமியின் தாயார் பேசுகையில், ``தீர்ப்புக்குப் பின்னர் எல்லோரும் எனது குழந்தைகள் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர். விசாரணை சரியான முறையில் நடந்திருந்தால், குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கியிருக்க முடியும். என் குழந்தைகளின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுவரை நான் ஓய மாட்டேன். எங்களுக்கு போலீஸ் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது.

பிறந்தநாள் பார்ட்டி; வகுப்பறைக்குள் பீர் பாட்டில்கள்!- ஆசிரியர்கள் திட்டியதால் மாணவி தற்கொலை

குற்றம் செய்தவர்களைக் காப்பாற்றுவதிலே மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். போலீஸ் காவலில் எடுத்த அதேநாளில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மரணம் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளும் வயது அவர்களுக்கு இல்லை. பின்னர் எப்படி அவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள். என்னுடைய குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளை கொலை செய்வதால் உங்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது. குற்றம் செய்தவர்களைக் காப்பாற்றத் துடிக்கும் அனைவரிடமும் நான் கேட்கும் கேள்வி இதுதான்.

Sexual Harassment
Sexual Harassment

என்னுடைய மூத்த மகளை அவர்கள் தொந்தரவு செய்தபோது எனது கணவர் பார்த்துள்ளார். பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்துகொண்டிருந்தவரால் எதும் செய்ய முடியவில்லை. ஆத்திரமாக சத்தம்போட்டதையடுத்து அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த விவகாரம் எனக்கு தெரியவந்ததையடுத்து தொலைபேசியில் அந்த நபருடன் வாக்குவாதம் செய்தேன். அடுத்தமுறை எங்கள் வீட்டுக்கு வந்தபோது அந்த நபரை விரட்டி விட்டோம். இந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் என் மகளை சடலமாகக் கண்டேன் ”என வலியுடன் பேசியுள்ளார்.