Published:Updated:

`நாமக்கல் மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணம்... வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!’ - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல்துறையின் கட்டுப்பாட்டில் நிகழ்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரின் மரண வழக்கினை சிபிசிஐடி-க்கு மாற்றிட உத்தரவிட்டுள்ளார்.

`நாமக்கல் மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணம்... வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!’ - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல்துறையின் கட்டுப்பாட்டில் நிகழ்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரின் மரண வழக்கினை சிபிசிஐடி-க்கு மாற்றிட உத்தரவிட்டுள்ளார்.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் வீட்டில் நடந்த நகை திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கடந்த நவம்பர் மாதம் 18-ஆம் தேதியன்று தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த விசாரணையில் ஜனவரி 11-ஆம் தேதி அன்று மாற்றுத்திறனாளி பிரபாகரன், அவரின் மனைவியை சந்தேகத்தின் பேரில் சேந்தமங்கலம் காவல்துறையினர் கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.

மரணம்
மரணம்

பின்னர் ஜனவரி 12-ஆம் தேதி சிறையில் இருக்கும்போதே, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பிரபாகரன் கூறியதன் அடிப்படையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று இரவு 11:40 மணியளவில் பிரபாகரன் உயிரிழந்தார். பின்னர் பிரபாகரனின் மரணம் தொடர்பாக பல போராட்டங்கள் நடந்ததையொட்டி சேந்தமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூன்று பேர் சேலம் டிஐஜி-யால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இதனை "காவல்துறையின் கட்டுப்பாட்டில் நடந்த சந்தேக மரணம்" என்றும் வழக்கு பதிவு செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழக அரசு வெளியீடு
தமிழக அரசு வெளியீடு

இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு தற்போது அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல்துறையின் கட்டுப்பாட்டில் நிகழ்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து, இந்த வழக்கினை குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றிட உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரபாகரனின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக 10 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism