Published:Updated:

`நளினிக்கு மட்டுமில்ல, மத்த ஆறு பேருக்கும் நான் அம்மாதான்; விடுதலை எப்போ?!' - காத்திருக்கும் பத்மா

நளினி, தாய் பத்மா

''நளினி தன் மகளைக்கூட 20 வருஷமா பார்க்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். பேரறிவாளனுடன் மத்த 6 பேரும் விடுதலை ஆகிடுவாங்க, நளினியை லண்டன்ல இருக்கிற மகள்கிட்டயே அனுப்பி வெச்சிடலாம்னு இருந்தேன். முதலமைச்சரும் நம்பிக்கை கொடுத்திருக்கார்.''

`நளினிக்கு மட்டுமில்ல, மத்த ஆறு பேருக்கும் நான் அம்மாதான்; விடுதலை எப்போ?!' - காத்திருக்கும் பத்மா

''நளினி தன் மகளைக்கூட 20 வருஷமா பார்க்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். பேரறிவாளனுடன் மத்த 6 பேரும் விடுதலை ஆகிடுவாங்க, நளினியை லண்டன்ல இருக்கிற மகள்கிட்டயே அனுப்பி வெச்சிடலாம்னு இருந்தேன். முதலமைச்சரும் நம்பிக்கை கொடுத்திருக்கார்.''

Published:Updated:
நளினி, தாய் பத்மா

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 31 ஆண்டு காலமாக சிறை வாழ்க்கையிலிருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. அவரையடுத்து, நளினி மற்றும் அவரின் கணவர் முருகன் உட்பட மற்ற 6 பேரும் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், பரோலில் வந்து வேலூர் மாவட்டம் காட்பாடியில் தங்கியிருக்கும் நளினியின் மனநிலையை அறிய அவரின் தாய் பத்மாவிடம் பேசினோம். ‘‘பேரறிவாளன் விடுதலையானதில் நளினிக்கு சந்தோஷம். விரைவில் நமக்கும் தீர்வு கிடைச்சிடும்னு நம்பிக்கையா இருக்கிறாள்.

பத்மா
பத்மா

நளினி ஒரு தாய். தன் மகளைக்கூட 20 வருஷமாகப் பார்க்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். பேரறிவாளனுடன் மத்த 6 பேரும் விடுதலை ஆகிடுவாங்க, நளினியை லண்டன்ல இருக்கிற மகள்கிட்டயே அனுப்பி வெச்சிடலாம்னு இருந்தேன். இந்த தீர்ப்பை வெச்சு மத்த 6 பேரையும் விடுதலை செய்வோம்னு முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். இதனால, நம்பிக்கையை கைவிடாமல் இருக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பரோலையும் நான்கைந்து மாதமா நீடிச்சி தர்றாரு முதலமைச்சர். அவருக்கு பெரிய நன்றி சொல்லணும். காட்பாடியில சொந்தக்காரங்க வீட்டுலதான் தங்கியிருக்கிறோம். நளினியும், நானும்தான் இருக்கிறோம். வீட்டை சுத்தியும் போலீஸ் நிக்குறாங்க. என்னால நடக்க முடியலை. எனக்கு 82 வயசு முடியப்போகுது. கால் வலி அதிகமாகிடுச்சி. காதும் சரியா கேட்க மாட்டேங்குது. மறதி அதிகமாகிடுச்சி. பின்னாடி போய் விழுற மாதிரியே இருக்குது. நளினிதான் கூட இருந்து பார்த்துக்கொள்கிறாள்.

நளினி, தாய் பத்மா
நளினி, தாய் பத்மா

நான் சென்னைக்குப் போய் முதலமைச்சரை சந்திக்கப் போறேன். ஏற்கெனவே, ரெண்டு முறை மனு கொடுக்கிறதுக்காக போனப்போ, அவரைப் பார்க்க முடியலை. பரோல் கேட்டு வேலூர் ஜெயில்ல என் மருமகன் முருகன் உண்ணாவிரதம் இருக்கிறார். அவர் சாப்பிடலைனு செய்தி வந்தா, இவளும் சாப்பிட மாட்டாள். இவளைப் பார்த்து வருத்தப்பட்டே நானும் சாப்பிடாம இருந்துடுறேன். இந்த 31 வருஷத்துல எவ்வளவோ வலி, அவமானங்களையும் பார்த்துட்டோம். வாழ்க்கை வறட்சியா நகருது. ஆனா, நம்பிக்கையை விடவில்லை. நளினி மட்டுமில்ல... மத்த 6 பேருக்குமே நான் தாய்தான். எல்லோரையும் சீக்கிரமா விடுதலை செய்யணும்னு கேட்டுக்கிறேன்’’ என்றார் நம்பிக்கையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism