Published:Updated:

இந்தியாவில் அதிக தற்கொலை... இரண்டாம் இடத்தில் தமிழகம்! - NCRB அறிக்கை சொல்வதென்ன?

தற்கொலை
தற்கொலை

தேசிய குற்றப் பதிவுகள் முகமை 2019-ம் ஆண்டில் நடந்திருக்கும் தற்கொலை குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்களின்படி அதிக தற்கொலைகள் நடைபெறும் இரண்டாவது மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது.

அண்மையில் தேசிய குற்றப் பதிவுகள் முகமை (National Crime Records Bureau - NCRB) வெளியிட்டிருக்கும் தகவல்படி, 2019-ம் ஆண்டு 1,39,123 தற்கொலைகள் நடந்திருக்கின்றன. 2018-ம் ஆண்டு பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை 1,34,516. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால், 2018-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் 0.02 விழுக்காடு அதிக தற்கொலைகள் நடந்துள்ளன.

2019-ம் ஆண்டு தமிழகத்தில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை 13,493 - NCRB

அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களில், 13.6 சதவிகிதத்துடன் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. 9.7 சதவிகிதத்துடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும், 9.1 சதவிகிதத்துடன் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை 2017-ம் ஆண்டில் பதிவான தற்கொலைகள் 11.1 சதவிகிதம். 2018-ம் ஆண்டில் பதிவானது 10.3 சதவிகிதம். அதுவே 2019-ம் ஆண்டை பொறுத்தவரை 9.7 சதவிகிதம் என்ற அளவில் பதிவாகும் தற்கொலைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகின்றன.

NCRB report
NCRB report

2019-ம் ஆண்டை பொறுத்தவரை தற்கொலை செய்துகொண்டவர்களில் 23.4 சதவிகிதம் பேர் தினக்கூலி தொழிலாளர்கள்தான். அடுத்ததாக 15.4 சதவிகிதம் பேர் குடும்பத் தலைவிகள். விவசாயத்துறையைச் சேர்ந்த 7.4 சதவிகிதம் பேர் தற்கொலை செய்திருப்பதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தற்கொலை செய்துகொண்டவர்களில் 74,629 நபர்கள், அதாவது 53.6% பேர் தூக்கிட்டுத் தற்கொலைகள் செய்திருக்கிறார்கள். விஷமருந்தி 35,882 (25.8%) பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

NCRB report
NCRB report

பெருநகரங்களின்அடிப்படையில் சென்னையில் 2,461 நபர்களும், கோவையில் 338 நபர்களும், மதுரையில் 345 நபர்களும், திருச்சியில் 188 நபர்களும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற தகவலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு