Published:Updated:

`நீட் தேர்வு முறைகேடு; சிக்கிய 2-வது இடைத்தரகர்!' - ஏஜென்ட் ரஷீதை நெருங்கும் சி.பி.சி.ஐ.டி

Theni CBCID Office
Theni CBCID Office

நேற்று மாலை கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நீட் இடைத்தரகர் ஒருவரை கைது செய்து தேனி அலுவலகத்துக்கு கொண்டுவந்தனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார்.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக இதுவரை 6 மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று மாலை கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நீட் இடைத்தரகர் ஒருவரை கைது செய்து தேனி அலுவலகத்துக்கு கொண்டுவந்தனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார். அவரிடம், சுமார் 12 மணி நேரத்தைக் கடந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

Theni CBCID Office
Theni CBCID Office
சென்னை மருத்துவ மாணவர் கைது! -வேகமெடுக்கும் நீட் தேர்வு மோசடி வழக்கு

தேனி மருத்துவக்கல்லூரி மாணவர் ஒருவர், அவரின் தந்தை வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்ட பின்னர், அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், இவர்களுடன் தொடர்புடைய இடைத்தரகர் ஆறுமுகத்தைக் கைது செய்தது சி.பி.சி.ஐ.டி.

நீட்
நீட்

தொடர்ந்து சென்னை மருத்துவ மாணவர் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் பெற்றதை அடுத்து, அவரின் தந்தை ரவிக்குமார் மட்டும் கைது செய்யப்பட்டார். இரு தினங்களுக்கு முன்னர், சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

`வெளியில இருக்கீங்க, ஜாக்கிரதையா இருங்க!'- தேனியில் மகனை எச்சரித்த `நீட்' வெங்கடேசன்

இந்நிலையில், அவருக்கு உதவிய நீட் இடைத்தரகரான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மனோகரன் என்பவரைக் கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், நேற்று மாலை 4 மணியளவில் தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்துவந்தனர். சுமார் 12 மணி நேரத்தைக் கடந்து மனோகரனிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மனோகரன் சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீட்
நீட்

இதுவரை இரண்டு இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்ட ஏஜென்ட் ரஷித் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விரைவில் கைது செய்வார்கள் என்றே கூறப்படுகிறது.

நீட் என்னும் அரச பயங்கரவாதம்!
பின் செல்ல