Published:Updated:

நீலகிரி: எல்லையோர சோதனைச் சாவடிகளை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்த `ஒமேகா-3' படை!

ஒமேகா-3 படை

நீலகிரி மாவட்டக் காவல்துறை தரப்பில் 10 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 36 காவலர்கள் அடங்கிய ஒமேகா-3 என்ற பெயரில் நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது.

நீலகிரி: எல்லையோர சோதனைச் சாவடிகளை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்த `ஒமேகா-3' படை!

நீலகிரி மாவட்டக் காவல்துறை தரப்பில் 10 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 36 காவலர்கள் அடங்கிய ஒமேகா-3 என்ற பெயரில் நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
ஒமேகா-3 படை

கேரளா, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களுடன் எல்லையைப் பகிரும் நீலகிரியில் 11 இடங்களில் மாநில எல்லையோர சோதனைச் சாவடிகள் அமைந்திருக்கின்றன. மேலும், மாவட்டத்தின் நுழைவு வாயில்களான பர்லியார், குஞ்சப்பனை, கெத்தை உள்ளிட்ட இடங்களில் 5 சோதனை சாவடிகள் இருக்கின்றன. அந்தந்த சோதனைச் சாவடிகளின் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களே சோதனைச் சாவடிகளில் சோதனை பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

ஒமேகா-3 படை
ஒமேகா-3 படை

இந்த நிலையில், நீலகிரி மாவட்டக் காவல்துறை தரப்பில் 10 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 36 காவலர்கள் அடங்கிய ஒமேகா-3 என்ற பெயரில் நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் உள்ள 16 சோதனைச் சாவடிகளிலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வாகன சோதனையில் இனி இந்தக் குழுவினர் ஈடுபடவுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒமேகா 3 படையின் சிறப்பு குறித்து நம்மிடம் பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ், ``நீலகிரிக்குள் மாவோயிஸ்ட்டுகள் நுழையவிடாமல் என்.எஸ்.டி குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள 16 சோதனைச் சாவடிகளில் உள்ளூர் காவல்துறையினர் பணியாற்றி வந்த நிலையில், பணி சுமை காரணமாக போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்புப் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இதனை களையும் நோக்கில் போதைப்பொருள்கள் கடத்தலை தடுப்பதற்காக என்.எஸ்.டி ஒமேகா-3 என்ற குழு உருவாக்கப்பட்டு சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் குழுவினர் சோதனைச் சாவடிகளில் முழு நேர பணியில் ஈடுபட உள்ளனர்.

ஒமேகா-3 படை
ஒமேகா-3 படை

இவர்களுக்கு ஆயுதங்களை கையாளுதல், மனவலிமை அதிகரிப்பு, வாகனச் சோதனையில் உள்ள நுணுக்கங்கள், இடர்பாடான சூழ்நிலையை எதிர்கொள்வது மற்றும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட் தேடுதல் பணிக்கும் இந்தக் குழுவினர் பயன்படுத்தப்படுவார்கள். கடந்த 1.4.21 முதல் 12.9.21 வரையிலான காலகட்டத்தில் சோதனை சாவடிகளில் உள்ளூர் காவலர்துறையினர் மேற்கொண்ட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதில் 39 பேர் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். அதேபோல் 2 வாகனங்கள், 11 கிலோ கஞ்சா, 20 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், என்.எஸ்.டி குழுவினர் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட 1.4.22 முதல் 12.9.22 வரையிலான காலகட்டத்தில் 125 பேர் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 வாகனங்கள், 15 கிலோ கஞ்சா, 4,033 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அறிவித்துள்ள போதையில்லாத தமிழகம் என்ற திட்டத்தை கருத்தில் கொண்டும் இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.